இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா அமெரிக்கா அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போது உடல்நல குறைவு காரணமாக பாதிக்கப்பட்டிருந்ததால் அந்த போட்டியை தவறவிட்டார். அதன் பின்னர் நேற்று டெல்லி நகரில் நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியின் போது முழு உடற்தகுதியை எட்டிய அவர் மீண்டும் இந்த போட்டியில் பங்கேற்று விளையாடியிருந்தார்.
ஜஸ்ப்ரீத் பும்ராவை இப்படி பயன்படுத்தியது தவறு : மோஹித் சர்மா
அவர் இந்திய அணிக்குள் வந்ததால் கடந்த போட்டியின் போது மிகச் சிறப்பாக விளையாடியிருந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் வேறு வழியின்றி பிளேயிங் லெவனில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற இந்த நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்கள் பந்து வீசிய ஜஸ்ப்ரீத் பும்ரா 20 ரன்களை விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தி அசத்தியிருந்தார்.
இப்படி தனது கம்பேக் போட்டியில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய பும்ரா மீண்டும் தனது பந்துவீச்சு பார்மை நிரூபித்துள்ளார். இந்நிலையில் நேற்றைய நமீபியா அணிக்கு எதிரான போட்டியின் போது ஜஸ்ப்ரீத் பும்ராவை இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பயன்படுத்திய விதம் மிகவும் தவறான ஒன்று என இந்திய அணியின் முன்னாள் வீரரான மோஹித் சர்மா சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : பும்ராவிற்கு நேற்று பவர்பிளே ஓவர்களில் ஒரு ஓவரையாவது வீச கொடுத்திருக்க வேண்டும். ஏனெனில் அவர் இந்த தொடரில் முதல் ஆட்டத்தை தவற விட்டுள்ளார். எனவே இரண்டாவது போட்டியில் அவர் விளையாட வரும்போது பவர்பிளே ஓவருக்குள் ஒரு ஓவர் வீசியிருந்தால் தான் அவரது பந்துவீச்சு நம்பிக்கைக்கு உரிய ஒன்றாக மாறும்.
இதையும் படிங்க : நமீபியா பந்துவீச்சளர்களை இந்த விடயத்தில் பாராட்டியே ஆகனும் – சூரியகுமார் யாதவ் பேட்டி
மேலும் போட்டியின் ஆரம்பத்திலேயே புதுப்பந்தில் விக்கெட் வீழ்த்தும் அவரை ஏழாவது ஓவரில் பயன்படுத்தியதும், பின் வரிசையில் பயன்படுத்தியதும் தவறு. என்னதான் இலக்கு பெரியதாக இருந்தாலும் முதன்மை வேகப்பந்து வீச்சாளரை சரியான இடத்தில் பயன்படுத்த வேண்டும். அதை விடுத்து ஐந்தாவது மற்றும் ஆறாவது பந்து வீச்சாளரை பவர்பிளே ஓவர்களில் வீச வைப்பது தவறு என மோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.



