
இந்திய டி20 கிரிக்கெட் அணியின் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மாவிற்கு நடைபெற்று வரும் 2026 டி20 உலக கோப்பை தொடரானது மோசமாகவே இருந்து வருகிறது. ஏனெனில் டி20 போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்களின் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் யாரும் அசைக்க முடியாத வீரராக அபிஷேக் ஷர்மா இருந்து வருகிறார். அதன் காரணமாக 2026 டி20 உலக கோப்பை தொடரில் அதிரடியான பேட்டிங்கில் பட்டையை கிளப்புவார் என்று பலராலும் அபிஷேக் ஷர்மா பாராட்டப்பட்டு வந்தார்.
ஆனால் அமெரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் டக் அவுட்டான அவர் நமீபியா அணிக்கு எதிரான போட்டியை உடல் நலக்குறைவு காரணமாக தவறவிட்டார். பின்னர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் கம்பேக் கொடுத்திருந்தாலும் அந்த போட்டியிலும் டக் அவுட்டாகி அனைவருக்கும் ஏமாற்றத்தை அளித்திருந்தார்.
இப்படி இரண்டு லீக் ஆட்டங்களில் அடுத்தடுத்து டக் அவுட்டான அவர் நெதர்லாந்து போட்டியிலாவது மீண்டும் பார்மிற்கு வந்து சூப்பர் 8 சுற்றுக்கு பலமாக செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்தவகையில் பிப்ரவரி 18-ஆம் தேதியான இன்று நடைபெற்று வரும் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அப்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரராக விளையாடிய அபிஷேக் ஷர்மா இந்த போட்டியிலும் தான் சந்தித்த மூன்றாவது பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். இதன் மூலம் டி20 உலக கோப்பை வரலாற்றில் ஒரு மோசமான சாதனை பட்டியலிலும் நான்காவது சர்வதேச வீரராக இணைந்துள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய மோசமான சாதனை யாதெனில் :
இதையும் படிங்க : எதிர்பாராத 2 மாற்றங்களுடன் அறிவிக்கப்பட்ட இந்திய அணி.. நெதர்லாந்து அணிக்கெதிராக – ஏற்பட்டுள்ள மாற்றம்
டி20 உலக கோப்பை வரலாற்றில் மூன்று வீரர்கள் மட்டுமே தொடர்ச்சியாக தாங்கள் விளையாடிய முதல் 3 போட்டிகளில் டக் அவுட்டாகியிருந்த வேளையில் நான்காவது வீரராக அபிஷேக் சர்மா இந்த பட்டியலில் இணைந்துள்ளார். ஏற்கனவே ஆஷிஷ் நெஹ்ரா, ஆண்ட்ரே பிளட்சர், ரோஜர் முகாசா என்கிற மூன்று வீரர்கள் இந்த மோசமான சாதனையில் இருந்த வேளையில் நான்காவது வீரராக அபிஷேக் சர்மாவும் இந்த பட்டியலில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.