
நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியின் போது 14 பந்துகளில் அரைசதம் அடித்து சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக அரைசதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை அபிஷேக் சர்மா நிகழ்த்தியிருந்தார். ஆனால் அதற்கு அடுத்த நான்காவது போட்டியிலேயே அவர் நேற்று ஒரு மோசமான சாதனையை சந்தித்துள்ளார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டியானது நேற்று விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்ற வேளையில் இந்த போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் குவித்தது.
இதன் காரணமாக 216 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி நியூசிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 165 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்திருந்தது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக துவக்க வீரராக விளையாடிய இளம் வீரர் அபிஷேக் சர்மா தான் சந்தித்த முதல் பந்திலயே கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறி இருந்தார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் ஐந்தாவது இந்திய வீரராக அவர் ஒரு மோசமான சாதனை பட்டியலில் இணைந்துள்ளார்.
இதையும் படிங்க : சர்வதேச டி20 போட்டிகளில் 3 ஆவது இந்திய வீரராக ஷிவம் துபே நிகழ்த்திய அசத்தல் சாதனை – விவரம் இதோ
அதாவது போட்டியின் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டான ஐந்தாவது இந்திய துவக்க வீரர் என்ற சாதனையை இவர் நிகழ்த்தியுள்ளார். இவருக்கு முன்னதாக ரோகித் சர்மா, ப்ரித்வி ஷா, கே.எல் ராகுல், சஞ்சு சாம்சன் ஆகியோர் இந்த மோசமான சாதனையில் இருந்த வேளையில் தற்போது ஐந்தாவது இந்திய வீரராக இந்த பட்டியலில் அபிஷேக் சர்மா இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.