இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியானது நேற்று விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நியூசிலாந்து அணியானது இந்திய அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரில் தங்களது முதல் வெற்றி பதிவு செய்தது.
ஷிவம் துபே நிகழ்த்திய அசத்தல் சாதனை :
அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய நியூசிலாந்து அணியானது இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடித்து 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் குவித்து அசத்தியது.
நியூசிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக அந்த அணியின் துவக்க வீரரான டிம் சைபர்ட் 62 ரன்களையும், டேவான் கான்வே 44 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 216 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 165 ரன்கள் மட்டுமே குவித்தது.
இதன் காரணமாக நியூசிலாந்து அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ஷிவம் துபே 23 பந்துகளை சந்தித்து 3 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர் என 65 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். அதிலும் குறிப்பாக இந்த போட்டியில் அரைசதம் கடந்த அவர் மூன்றாவது இந்திய வீரராக சர்வதேச டி20 போட்டியில் மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இதையும் படிங்க : இந்த போட்டியில் என்னோட பிளான் இதுதான்.. இந்திய அணியை வீழ்த்திய பிறகு பேசிய – டிம் சைபர்ட்
அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : இன்றைய போட்டியின் போது 15 பந்துகளில் அவர் அரைசதம் அடித்து அசத்தியிருந்தார். இதன்மூலம் யுவராஜ் சிங் (12 பந்துகள்), அபிஷேக் சர்மா (14 பந்துகள்) ஆகியோருக்கு அடுத்து அதிவேக அரைசதம் அடித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



