
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அவ்வப்போது நடைபெற்று முடியும் தொடர்களுக்கு இடையே மூன்று வகையான தரவரிசை பட்டியலையும் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் டி20 போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை ஏற்கனவே ஐசிசி வெளியிட்டு இருந்தது. அதில் டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் இளம் வீரர் அபிஷேக் ஷர்மா தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வந்தார்.
இந்நிலையில் ஆசிய கோப்பை தொடரானது இறுதி கட்டத்தை எட்டியுள்ள வேளையில் தற்போது புதிய டி20 தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அந்த வகையில் செப்டம்பர் 24-ஆம் தேதியான இன்று வெளியான புதிய தரவரிசை பட்டியலில் மீண்டும் இந்திய அணியின் இளம் வீரர் அபிஷேக் சர்மா தனது முதல் இடத்தை தக்க வைத்துள்ளார்.
அதோடு இம்முறை வெளியான இந்த பட்டியலில் 907 புள்ளிகளை பெற்றுள்ள அவர் சூரியகுமார் யாதவ், விராட் கோலி ஆகியோருக்கு அடுத்து மூன்றாவது இந்திய வீரராக மிகச்சிறப்பான சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். அது குறித்த தகவல் தற்போது வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : அபிஷேக் சர்மாவுக்கு முன்னதாக விராட் கோலி மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் ஐசிசி டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் 900 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர். அதிலும் குறிப்பாக இந்திய அணி சார்பாக டி20 போட்டிகளில் அதிக தரவரிசை புள்ளிகளை பெற்ற வீரராக சூரிய குமாரி 912 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார்.
அவருக்கு அடுத்து விராட் கோலி 909 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இவ்வேளையில் மூன்றாவது வீரராக 900 புள்ளிகளை தாண்டியுள்ள அபிஷேக் சர்மா 907 புள்ளிகளுடன் இருக்கிறார். தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் இன்னும் இந்திய அணிக்கு மூன்று ஆட்டங்கள் எஞ்சியுள்ளன.
இதையும் படிங்க : ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியிலும் இடம்பிடிக்கும் அதிரடி வீரர் அபிஷேக் சர்மா – எந்த தொடரில் தெரியுமா?
அதனால் எஞ்சியுள்ள இந்த மூன்று ஆட்டங்களிலும் அவர் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் அவர்கள் இருவரையும் தாண்டி அதிகபட்ச புள்ளிகளை எட்டவும் வாய்ப்பு இருக்கிறது. ஒட்டுமொத்தமாக டி20 போட்டிகளில் அதிக புள்ளிகளை பெற்ற வீரராக டேவிட் மலான் 919 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.