கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நேற்று ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் விளையாடிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நட்சத்திர அதிரடி துவக்க வீரரான அபிஷேக் சர்மாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணி சார்பாக துவக்க வீரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா போட்டியின் ஆரம்பம் முதலே அதிரடியில் வெளுத்து வாங்கினார்.
அபிஷேக் சர்மாவுக்கு விதிக்கப்பட்ட அபராதம் :
இந்த போட்டியில் 21 பந்துகளை சந்தித்த அவர் 4 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர் என 48 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். இப்படி அவர் ஆட்டமிழந்து வெளியேறும் போது ஆவேசமாக சில வார்த்தைகளை வெளிப்படுத்தியதாலே அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியின் போது பிளசிங் முஸாபரனி வீசிய பந்தை அபிஷேக் சர்மா தூக்கி அடிக்க அந்த பந்தை பவுண்டரி லைனில் இருந்த வருண் சக்கரவர்த்தி கேட்ச் பிடித்தார். இருப்பினும் அந்த கேட்ச் மீது சந்தேகப்பட்ட அபிஷேக் ஷர்மா மூன்றாவது அம்பயரின் உதவியை நாடினார். அதனை இரண்டு மூன்று முறை பரிசோதித்த மூன்றாவது அம்பயரும் தெளிவான ஆதாரம் இல்லை என்பதனால் அபிஷேக் சர்மா அவுட் என்ற முடிவை அறிவித்து விட்டார்.
அதை சற்றும் எதிர்பாராத அபிஷேக் ஷர்மா இது அவுட்டே கிடையாது. பந்து தரையில் பட்டுள்ளது என்பது போன்று கூறிவிட்டு சில வார்த்தைகளை மோசமாக பயன்படுத்திவிட்டு அதிருப்தியுடன் மைதானத்தில் இருந்து வெளியேறினார். இது ஐபிஎல் நடத்தை விதிகளின் 2.3 என்கிற விதியின் கீழ் குற்றமாகும்.
இதையும் படிங்க : 7 வருஷமா உசுர குடுத்து விளையாடுறன்.. அபிஷேக் சர்மாவுக்கு நடந்தது அநீதி – யுவ்ராஜ் சிங் சாடல்



