- Advertisement -
டி20

12 பந்தில் 50..16 சிக்ஸ் 148 ரன்ஸ்.. குரு யுவ்ராஜ் சாதனையை சமன் செய்த அபிஷேக்.. புதிய சாதனை

இந்தியாவில் சயீத் முஸ்தாக் அலி கோப்பை 2025 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகின்றது. அதில் நவம்பர் 30ஆம் தேதி ஹைதராபாத் நகரில் நடைபெற்ற எலைட் குரூப் சி பிரிவின் போட்டியில் பெங்கால் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் அபிஷேக் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப்புக்கு அபிஷேக் சர்மா மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் அதிரடியாக விளையாடினார்கள். அதில் ஐசிசி டி20 தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக ஜொலிக்கும் அபிஷேக் சர்மா பெங்கால் பவுலர்களை அடித்து நொறுக்கினார். அதைப் பயன்படுத்தி முகமது ஷமி, ஆகாஷ் தீப் போன்ற பெங்கால் பவுலர்களை அடித்து நொறுக்கிய அபிஷேக் ஷர்மா 12 பந்தில் 50 ரன்கள் அடித்தார்.

- Advertisement -

நொறுக்கிய அபிஷேக்:

அதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் 2வது வேகமான அரை சதத்தை அடித்த இந்திய வீரர் என்ற தம்முடைய குரு யுவராஜ் சிங் சாதனையை அபிஷேக் சமன் செய்தார். இதற்கு முன் 2007 டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவுக்கு விளையாடும் போது யுவராஜ் சிங்கும் 12 பந்தில் அரை சதமடித்ததை மறக்க முடியாது.

அவருடன் சேர்ந்து மறுபுறம் தம்முடைய பங்கிற்கு பெங்கால் பவுலர்களை வெளுத்து வாங்கிய பிரப்சிம்ரன் சிங் அரை சதத்தை அடித்தார். வெறும் 12.3 ஓவரில் 205 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பஞ்சாப்புக்கு வெறித்தனமான துவக்கத்தைக் கொடுத்த அந்த ஜோடியில் பிரப்சிம்ரன் சிங் 8 பவுண்டரி 4 சிக்ஸருடன் 70 (35) ரன்கள் விளாசி அவுட்டானார். மறுபுறம் தொடர்ந்து பட்டாசாக விளையாடிய அபிஷேக் 32 பந்தில் சதத்தை அடித்தார்.

- Advertisement -

பஞ்சாப் சாதனை ஸ்கோர்:

எதிர்புறம் வந்த அன்மோல்ப்ரீத் சிங் 11 (6), ரமந்திப் சிங் 39 (15), சன்விர் சிங் 22 (8) ரன்கள் விளாசி அவுட்டானார்கள். இந்தப் பக்கம் தொடர்ந்து நெருப்பாக பேட்டிங் செய்த அபிஷேக் ஒருவழியாக 8 பவுண்டரி 16 சிக்சருடன் 148 (52) ரன்களை 284.62 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி அவுட்டாகி சென்றார். அதன் வாயிலாக திலக் வர்மாவுக்கு (151) பின் 2வது அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய வீரர் என்ற ஸ்ரேயாஸ் ஐயர் (147) சாதனையை உடைத்த அபிஷேக் சர்மா (148) புதிய சாதனை படைத்தார்.

இதையும் படிங்க: 4 ஆவது இடத்தில் யாருக்கு வாய்ப்பு? ரிஷப் பண்டுக்கா? திலக் வர்மாவுக்கா? – சபா கரீம் அளித்த பதில்

இறுதியில் நமன் திர் 7*, நேஹால் வதேரா 2* ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் பஞ்சாப் 310/5 ரன்கள் குவித்தது. அதன் வாயிலாக சயீத் முஸ்டாக் அலி கோப்பையில் பரோடாவுக்கு (349/5) பின் 2வது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த அணி என்ற சாதனையை பஞ்சாப் படைத்துள்ளது. பெங்கால் அணிக்கு அதிகபட்சமாக ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -