இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 31-ஆவது லீக் போட்டியானது நேற்று ஹைதராபாத் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் இஷான் கிஷன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும், அக்சர் பட்டேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற டெல்லி அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதனைத்தொடர்ந்து முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணியானது :
விராட் கோலியின் சாதனையை சமன் செய்த அபிஷேக் சர்மா :
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 242 ரன்களை குவித்தது. சன் ரைசர்ஸ் அணி சார்பாக அபிஷேக் சர்மா 135 ரன்களையும், டிராவிஸ் ஹெட் மற்றும் ஹென்றிச் கிளாஸன் ஆகியோர் தலா 37 ரன்களை குவித்து அசத்தினர். பின்னர் 243 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது :
20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக சன் ரைசர்ஸ் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் சன் ரைசர்ஸ் அணி சார்பாக மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா 68 பந்துகளை சந்தித்து 10 பவுண்டரி மற்றும் 10 சிக்ஸர் என 135 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
அவர் அடித்த இந்த சதத்தின் மூலம் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலியின் மாபெரும் சாதனை ஒன்றினை சமன் செய்துள்ளார். அதுகுறித்த விவரம் வெளியாகி அனைவரது மத்தயிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்தவகையில் அபிஷேக் சர்மா நிகழ்த்திய சாதனை யாதெனில் : டி20 போட்டிகளில் ஒட்டுமொத்தமாக அதிக சதங்களை அடித்த இந்திய வீரராக முதலிடத்தில் இருந்தார்.
இதையும் படிங்க : இன்னும் 50 ரன்களே தேவை.. தோனியின் மாபெரும் சாதனையை முறியடிக்க காத்திற்கும் – கே.எல் ராகுல்
விராட் கோலி சர்வதேச டி20 போட்டி, ஐ.பி.எல் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட டி20 போட்டிகளையும் சேர்த்து 9 சதங்களை அடித்துள்ளார். அந்த சாதனையை நேற்று அடித்த சதத்தின் மூலம் அபிஷேக் சர்மா (9 சதங்கள்) சமன் செய்துள்ளார்.



