இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்று வரும் 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வரும் வேளையில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளன நடப்பு சாம்பியனான இந்திய அணி தங்களது முதலாவது ஆட்டத்தில் அமெரிக்கா அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது முதலாவது வெற்றியை பதிவு செய்தது.
இரண்டாவது போட்டியில் அபிஷேக் சர்மா விளையாடுவது சந்தேகம் :
அதனை தொடர்ந்து சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியானது அடுத்ததாக தங்களது இரண்டாவது லீக் ஆட்டத்தில் நமீபியா அணியை எதிர்த்து நாளை செப்டம்பர் 12-ஆம் தேதி டெல்லி நகரில் நடைபெற உள்ள போட்டியில் விளையாட இருக்கிறது. இதன் காரணமாக இந்தியா மற்றும் நமீபியா ஆகிய இரு அணிகளை சேர்ந்த வீரர்களும் தற்போது டெல்லி மைதானத்தில் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் நாளை நடைபெற இருக்கும் இந்த இரண்டாவது லீக் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர அதிரடி ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில் போட்டி நாளை ஆரம்பிக்க உள்ள வேளையில் தற்போது அபிஷேக் சர்மாவுக்கு திடீரென உடல் நலக்கோளாறு ஏற்பட்டு டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக நாளை நடைபெற இருக்கும் நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது. மேலும் பிப்ரவரி 15-ஆம் தேதி நடைபெற இருக்கும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவர் அணிக்கு திரும்பலாம் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் மிகப்பெரிய ஆட்டம்.. அதுல ஜெயிக்கப்போவது இவங்கதான் – சவுரவ் கங்குலி கருத்து
ஏற்கனவே பிப்ரவரி 8-ஆம் தேதி பயிற்சியாளர் கம்பீர் அவர்கள் தனது வீட்டில் வைத்த விருந்துக்கு சென்ற அபிஷேக் சர்மா அங்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் ஆகியவற்றால் அவதிப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் மற்றவர்களை காட்டிலும் முன்கூட்டியே ஹோட்டல் அறைக்கு திரும்பியிருந்த வேளையில் தற்போது காய்ச்சல் காரணமாக அவர் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



