குரு யுவ்ராஜ் சிங்கின் 2007 டி20 உ.கோ சாதனையை உடைத்த அபிஷேக்.. இங்கிலாந்துக்கு எதிராக புதிய சாதனை

Abhishek Sharma 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டி கொல்கத்தாவில் ஜனவரி 22ஆம் தேதியில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து சுமாராக பேட்டிங் செய்து 133 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயம் செய்தது.

அதிகபட்சமாக கேப்டன் ஜோஸ் பட்லர் 68 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்ததாக விளையாடிய இந்திய அணிக்கு துவக்க வீரர் அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடினார். குறிப்பாக சமீபத்திய போட்டிகளில் பெரிய ரன்கள் எடுக்க தவறியதால் அவர் மீது ஒரு அதிருப்தி இருந்து வந்தது.

- Advertisement -

அபிஷேக் அதிரடி:

அதைப் போக்கும் வகையில் அட்டகாசமாக விளையாடிய அவர் பவுண்டரிகளை விட அதிகமாக சிக்ஸர்கள் பறக்க விட்டார். அந்த வகையில் அதிரடியாக விளையாடிய அவர் 20 பந்துகளில் அரை சதத்தை அடித்து அசத்தினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அபிஷேக் 5 பவுண்டரி 8 சிக்ஸர்களுடன் 79 (34) ரன்களை 232.35 ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்து 12.5 ஓவரிலேயே இந்தியா வெற்றி பெற உதவினார்.

அவருடைய ஆட்டத்தால் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 1 – 0* (5) என்ற கணக்கில் இத்தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. முன்னதாக இப்போட்டியில் 8 சிக்சர்கள் அடித்த அபிஷேக் ஷர்மா இங்கிலாந்துக்கு எதிராக ஒரு சர்வதேச டி20 போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் 2007 டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக யுவராஜ் சிங் 7 சிக்ஸர்கள் அடித்ததே முந்தைய சாதனை.

- Advertisement -

குருவை முந்திய சிஷ்யன்:

டர்பன் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் ஸ்டூவர்ட் பிராடுக்கு எதிராக மட்டும் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்த யுவ்ராஜ் மொத்தம் 7 சிக்ஸர்களை அடித்து சாதனையை படைத்திருந்தார். தற்போது அந்த சாதனையை அபிஷேக் சர்மா உடைத்துள்ளார். யுவராஜ் சிங் தான் தம்முடைய குரு என்று கடந்த காலங்களில் அபிஷேக் பலமுறை கூறியுள்ளார்.

இதையும் படிங்க: இப்படி நடந்த பிறகு நாங்க எப்படி ஜெயிக்க முடியும்.. இந்திய அணிக்கெதிரான தோல்விக்கு பிறகு – பட்லர் வருத்தம்

இன்று தம்முடைய குருவை மிஞ்சும் அளவுக்கு விளையாடியுள்ள அபிஷேக் புதிய சாதனையும் படைத்துள்ளார். அவருக்கு யுவராஜ் சிங் ட்விட்டரில் தெரிவித்துள்ள பாராட்டுப் பின்வருமாறு. “இந்தத் தொடரை நன்றாக ஆரம்பித்துள்ளீர்கள் இந்திய பையன்களே. நமது பவுலர்கள் நல்ல அடித்தளத்தை அமைத்தார்கள். டாப் இன்னிங்ஸ் விளையாடினீர்கள் அபிஷேக் சார். நேராக நீங்கள் அடித்த 2 பவுண்டரிகள் எனக்கு பிடித்தன” என்று ஜாலியாக பாராட்டியுள்ளார்.

Advertisement