- Advertisement -
இந்திய கிரிக்கெட்

நான் சொல்றத நம்புங்க.. 2026 டி20 உ.கோப்பையில் அவர் இந்தியாவை ஜெய்க்க வைப்பாரு.. அபிஷேக் ஆதரவு

தென்னாபிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற 3வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. டிசம்பர் 14ஆம் தேதி தரம்சாலாவில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்கா 118 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதைத் துரத்திய இந்தியா 15.5 ஓவரில் 120/3 ரன்கள் குவித்து எளிதாக வென்று 2 – 1* (5) என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்திய அணிக்கு அபிஷேக் ஷர்மா அதிரடியாக விளையாடி 35 (16) ரன்கள் குவித்து அசத்தினார். ஆனால் அவருடன் இணைந்து தடுமாற்றமாக விளையாடிய துணை கேப்டன் சுப்மன் கில் 28 (28) ரன்னில் க்ளீன் போல்ட்டானார். இதையும் சேர்த்து கடந்த 18 சர்வதேச டி20 போட்டிகளில் அவர் இந்தியாவுக்காக ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை.

- Advertisement -

என்னை நம்புங்க:

அதே போல கேப்டன் சூரியகுமாரும் தடுமாறி 12 (11) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தையே கொடுத்தார்கள். அந்த வகையில் மற்ற பேட்ஸ்மேன்களுக்கு முன்னுதாரணமாக அதிரடி காட்ட வேண்டிய கேப்டனும் துணை கேப்டனும் திணறலாக விளையாடுவது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்து வருகிறது. இந்நிலையில் சூரியகுமார், கில் ஆகியோருடைய ஃபார்ம் பற்றி கவலைப்பட தேவையில்லை என்று அபிஷேக் ஷர்மா தெரிவித்துள்ளார்.

மிகவும் தரமான வீரர்களான அவர்கள் தக்க சமயத்தில் ஃபார்முக்கு வந்து விடுவார்கள் என்றும் அபிஷேக் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். குறிப்பாக தம்முடைய மாநிலத்தைச் சேர்ந்த சுப்மன் கில் 2026 டி20 உலகக் கோப்பைகளில் இந்தியாவுக்கு நிறைய போட்டிகளை வென்று கொடுப்பார் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அபிஷேக் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

கில் அசத்துவாரு:

“ஒரு விஷயத்தை உங்களுக்கு நான் நேரடியாகவே சொல்கிறேன். என்னையும் சூரியகுமாரையும், சுப்மன் கில்லையும் இந்தியாவுக்காக உலகக் கோப்பையிலும், அதற்கு முன்பாகவும் போட்டிகளை வென்று கொடுப்போம் என்று நம்புங்கள். அவர்களுடன் நான் நீண்ட காலம் விளையாடியுள்ளேன். குறிப்பாக சுப்மன் கில் எங்கே அசத்துவார், எதிரணி யாராக இருந்தாலும் எம்மாதிரியான சூழ்நிலைகளில் அசத்துவார் என்பது எனக்குத் தெரியும்”

இதையும் படிங்க: டி20 போட்டிகளில் புவனேஷ்வர் குமாரின் சாதனையை முறியடித்து முன்னேறிய அர்ஷ்தீப் சிங் – விவரம் இதோ

“அவர் மேலே எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. அவர் மேல் விரைவில் அனைவரும் அதே நம்பிக்கையைப் பெறுவார்கள். தரம்சாலா பிட்ச்சில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவி இருந்தது. எனவே நான் நல்ல துவக்கத்தைக் கொடுத்தால் போட்டி பவர்பிளே ஓவர்களிலேயே முடியும் என்பது எனக்குத் தெரியும். அதுவே எங்கள் திட்டமாகும். மற்ற பேட்ஸ்மேன்கள் நிதானமாக விளையாடி போட்டியை முடிக்க வேண்டும் என்பதே எங்களது எளிமையான திட்டம்” என்று கூறினார்.

- Advertisement -