டி20 போட்டிகளில் புவனேஷ்வர் குமாரின் சாதனையை முறியடித்து முன்னேறிய அர்ஷ்தீப் சிங் – விவரம் இதோ

Arshdeep Singh and Bhuvi
- Advertisement -

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நேற்று தரம்சாலா நகரில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் தற்போதைய நிலையில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது போட்டியில் அடைந்த மோசமான தோல்விக்கு பின்னர் இந்திய அணியின் செயல்பாடு மீது கடுமையான விமர்சனங்கள் இருந்தன.

புவனேஷ்வர் குமாரின் சாதனையை முறியடித்த அர்ஷ்தீப் சிங் :

இவ்வேளையில் நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீசிய இந்திய அணியானது மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி 117 ரன்களுக்கு தென்னாப்பிரிக்க அணியை சுருட்டியது. பின்னர் 118 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை 16 ஓவர்களில் துரத்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்திய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்கள் பந்துவீசி வெறும் 13 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

அவரது இந்த சிறப்பான பந்துவீச்சு காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் அவர் எடுத்த 2 விக்கெட்டுகளில் ஒரு விக்கெட்டை பவர்பிளே ஓவர்களில் எடுத்ததன் மூலம் புவனேஸ்வர் குமாரின் மாபெரும் சாதனை ஒன்றினையும் அவர் கடந்துள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்தியுள்ள சாதனை யாதெனில் :

- Advertisement -

இதுவரை இந்திய அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளில் பவர்பிளே ஓவர்களில் அதிக விக்கெட்டை எடுத்த இந்திய வீரராக புவனேஸ்வர் குமார் 47 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் இருந்தார். ஆனால் நேற்றைய போட்டியில் அர்ஷ்தீப் சிங் எடுத்த ஒரு விக்கெட்டையும் சேர்த்து இதுவரை 48 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : போன மேட்ச்ல மோசமாக பந்துவீசிய நான் இன்றைய போட்டியில் அசத்த இதுவே காரணம் – அர்ஷ்தீப் சிங் பேட்டி

இந்திய அணிக்காக கடந்த 2022-ஆம் ஆண்டு சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகமான அவர் இதுவரை 71 போட்டிகளில் விளையாடி 109 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதோடு இந்திய அணி சார்பாக சர்வதேச டி20 போட்டிகளில் முதலில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தியவரும் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement