
சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி மழை காரணமாக தடைபட்ட வேளையில் அடுத்ததாக நடைபெற்ற இரண்டு போட்டிகளில் இவ்விரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணத்தில் சமநிலை வகிக்கின்றன.
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டியானது வரும் நவம்பர் 6-ஆம் தேதி கோல்டு கோஸ்ட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இந்த தொடரில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை பெறும் என்பதனால் இவ்விரு அணிகளை சேர்ந்த வீரர்களும் தற்போது தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்த நான்காவது போட்டியில் விளையாட இருக்கும் இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர்களான அபிஷேக் சர்மா மற்றும் திலக் வர்மா ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்த காத்திருக்கின்றனர். அந்த வகையில் அவர்கள் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் :
கடந்த 2023 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகமான திலக் வர்மா இதுவரை 35 போட்டிகளில் விளையாடி 32 இன்னிங்ஸ்களில் 2 சதம் மற்றும் 4 அரைசதம் என 991 ரன்கள் குவித்துள்ளார். அதேபோன்று மற்றொரு இளம் நட்சத்திர வீரரான அபிஷேக் சர்மா :
கடந்த ஆண்டு இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் அறிமுகமாகி 27 போட்டிகளில் விளையாடி 26 இன்னிங்ஸ்களில் 2 சதம் மற்றும் 6 அரைசதம் என 961 ரன்கள் குவித்துள்ளார். இதன் காரண மாக நான்காவது போட்டியில் திலக் வர்மா 9 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் சர்வதேச டி20 போட்டிகளில் 1000 ரன்களை பூர்த்தி செய்த இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்துவார்.
இதையும் படிங்க : டி20 போட்டிக்கு என்ன தேவையோ அதை வாஷிங்க்டன் சுந்தர் சரியா செய்தார் – ஆரோன் பின்ச் பாராட்டு
அதேபோன்று அபிஷேக் சர்மாவும் 39 ரன்களை அடிக்கும் பட்சத்தில் சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணி சார்பாக 1000 ரன்களை பூர்த்தி செய்த பேட்ஸ்மேன்களின் வரிசையில் இணைவார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விரு வீரர்களும் அடுத்த போட்டியில் இந்த சாதனையை நிகழ்த்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.