டி20 போட்டிக்கு என்ன தேவையோ அதை வாஷிங்க்டன் சுந்தர் சரியா செய்தார் – ஆரோன் பின்ச் பாராட்டு

Finch and Sundar
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியானது நேற்று அக்டோபர் 2-ஆம் தேதி ஹோபர்ட் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்து இந்த தொடரை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்து அசத்தியது.

வாஷிங்டன் சுந்தர் அணிக்கு என்ன தேவையோ அதை சரியாக செய்தார் : ஆரோன் பின்ச் பாராட்டு

அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணி சார்பாக அதிகபட்சமாக டிம் டேவிட் 74 ரன்களையும், மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் 64 ரன்களையும் குவித்தனர். இந்திய அணி சார்பாக அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

- Advertisement -

அதனை தொடர்ந்து 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை மிகச் சிறப்பாக எதிர் கொண்டு 18.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 23 பந்துகளை சந்தித்து 3 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர் என 49 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இந்த போட்டியில் வாஷிங்டன் சுந்தர் பேட்டிங் செய்த விதம் பலரது மத்தியிலும் பாராட்டினை பெற்று வரும் வேளையில் டி20 போட்டிகளில் எப்படி விளையாட வேண்டுமோ அப்படியே மிகச்சரியாக வாஷிங்டன் சுந்தர் விளையாடியதாக முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் அவரை பாராட்டியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : நேற்று வாஷிங்டன் சுந்தர் ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்தது. இந்திய அணிக்கு என்ன தேவையோ அதனை அவர் களத்தில் நின்று செய்து காண்பித்தார் என்று நினைக்கிறேன்.

- Advertisement -

ஏனெனில் இந்திய அணி குறிப்பிட்ட இடைவெளியில் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து வந்த வேளையில் மறுபுறம் இருந்த திலக் வர்மாவிற்கு அழுத்தம் கூடியது. ஆனால் அந்த நேரத்தில் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களின் மீது அழுத்தத்தை போட்டார். இப்படி எதிரணியின் பந்துவீச்சாளர்கள் மீது அழுத்தத்தை போடுவது டி20 போட்டிகளில் மிக முக்கியம்.

இதையும் படிங்க : வாஷிங்டன் சுந்தர் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியான முறையில் நியாயப்படுத்தி விட்டார் – இர்பான் பதான் கருத்து

அதனை வாஷிங்டன் சுந்தர் மிகச் சிறப்பாக செய்தார். அதன் காரணமாக எதிர்ப்புறம் திலக் வர்மாவிற்கு அழுத்தம் குறைந்தது. இந்த போட்டியில் வாஷிங்டன் சுந்தர் மைதானத்தின் இரண்டு புறங்களிலும் மிகச் சிறப்பான பேட்டிங்கை காண்பித்திருந்தார். இந்த போட்டியில் அவர் விளையாடிய விதம் உண்மையிலேயே டாப் கிளாஸ் என ஆரோன் பின்ச் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement