சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அவ்வப்போது நடைபெற்று முடியும் தொடர்களுக்கு மத்தியில் மூன்று வகையான போட்டிகளுக்குமான தரவரிசை பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் 2026 டி20 உலக கோப்பை தொடரின் இடையில் டி20 போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கும் அபிஷேக் சர்மா :
அந்த வகையில் வெளியாகியுள்ள இந்த தரவரிசை பட்டியல் பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் வெளியான டி20 போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்களின் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
லீக் சுற்று போட்டிகளில் மூன்று ஆட்டங்களில் டக் அவுட்டான அவர் சூப்பர் 8 சுற்று போட்டியின் போது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக 15 ரன்கள் அடித்திருந்தார். இருந்தாலும் 62 புள்ளிகள் என்ற நல்ல முன்னிலையோடு அவர் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். அதே போன்று இந்த டாப் 10-ல் மற்றொரு இந்திய நட்சத்திர வீரரான இஷான் கிஷன் மூன்று இடங்கள் முன்னேறி ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.
சமீப காலமாகவே மிகச் சிறப்பான ஃபார்மில் இருந்து வரும் இஷான் கிஷன் டி20 உலக கோப்பை தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அவர் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். ஆல்ரவுண்டர்கள் தரவரிசை பட்டியலை பொருத்தவரை ஜிம்பாப்வே அணியின் கேப்டனான சிக்கந்தர் ராசா முதலிடத்தில் இருக்கிறார்.
இதையும் படிங்க : ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டிக்கான இந்திய அணியில் ஏற்படவுள்ள – 3 முக்கிய மாற்றங்கள்
மூன்றாவது இடத்தில் ஹார்டிக் பாண்டியாவும், ஐந்தாவது இடத்தில் ஷிவம் துபேவும் இருக்கின்றனர். பந்து வீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார். அதேபோன்று நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா எட்டாவது இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



