உலக கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது அரையிறுதி சுற்றினை நோக்கி நகர்ந்து வருகிறது. சூப்பர் 8 சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோத இருக்கின்றன.
இந்திய அணியில் ஏற்படவுள்ள 3 முக்கிய மாற்றங்கள் :
ஏற்கனவே நடைபெற்ற சூப்பர் 8 சுற்றின் முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணியிடம் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் படுமோசமான தோல்வியை சந்தித்ததால் இன்றைய போட்டியில் மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்றைய ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் சில குறிப்பிட்ட மாற்றங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் இந்திய அணியில் மூன்று முக்கிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. முதலில் மோசமான பேட்டிங் பார்ம் காரணமாக தவித்து வரும் திலக் வர்மா வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக டாப் ஆர்டரில் சஞ்சு சாம்சன் இடம் பெறுவார் என்று கூறப்படுகிறது.
அதோடு ரிங்கு சிங் தனது தந்தையை காண சொந்த ஊருக்கு சென்று திரும்பியதால் அவர் நேரடியாக இந்த போட்டியில் விளையாட வாய்ப்பில்லை. எனவே அவருக்கு பதிலாக கூடுதல் சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவ் இடம் பெறலாம் என்று தெரிகிறது.
இதையும் படிங்க : பாவம் அவர் மனசுல என்ன நினைக்குறாருனு தெரியல.. அக்சர் படேல் குறித்து – அஷ்வின் வருத்தம்
அதேபோன்று கடந்த போட்டியில் விளையாடிய வாஷிங்டன் சுந்தர் வெளியேற்றப்பட்டு மீண்டும் இந்திய அணியின் துணை கேப்டனான அக்சர் பட்டேல் அணிக்குள் வருவார் என்று தெரிகிறது. இந்த மூன்று மாற்றங்கள் நிச்சயம் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் ஏற்படும் என்று கூறப்படுகிறது. அதுதவிர்த்து வேறு எந்த மாற்றமும் இருக்காது என்றும் தெரிகிறது.



