- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஐ.பி.எல் முடிஞ்ச கையோட கே.எல் ராகுல் எடுத்த அந்த முடிவு தான் அவர் அசத்த காரணம் – அபிஷேக் நாயர் கருத்து

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்திருந்தார். அதன் காரணமாக இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக இளம் வீரர் சுப்மன் கில் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையிலான இந்திய அணி தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

கே.எல் ராகுல் அசத்த இதுவே காரணம் : அபிஷேக் நாயர்

இந்த தொடரில் இந்திய அணியின் சார்பாக ரோஹித் சர்மாவின் துவக்க வீரருக்கான இடத்தில் களமிறங்கிய கே.எல் ராகுல் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அந்த இடத்தினை நிரந்தரமாக பிடித்துக் கொண்டார் என்று கூறலாம். ஏனெனில் நடைபெற்று வரும் இந்த தொடரில் 10 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்த ராகுல் 53 ரன்கள் சராசரியுடன் 532 ரன்கள் குவித்துள்ளார்.

- Advertisement -

இதன்மூலம் இந்த தொடரில் அதிக ரன்களை அடித்த இரண்டாவது இந்திய வீரராக சாதனை நிகழ்த்தியுள்ளார். அதுமட்டுமின்றி இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 500-க்கும் மேற்பட்ட ரன்களை குவித்த இரண்டாவது இந்திய துவக்க வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தி இருந்தார்.

இப்படி பல்வேறு சாதனைகளை இந்த டெஸ்ட் தொடரில் நிகழ்த்தியிருக்கும் அவரை இந்திய அணியின் முன்னாள் துணை பயிற்சியாளரான அபிஷேக் நாயர் பாராட்டியது மட்டுமின்றி அவரது இந்த சிறப்பான ஆட்டத்திற்கு என்ன காரணம்? என்பது குறித்த தகவலையும் வெளியிட்டுள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : கே.எல் ராகுலின் பேட்டிங்கில் நாம் பெரியளவில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்ய வேண்டியதில்லை. ஏனெனில் அவரால் இயற்கையாகவே மிகச் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியும்.

- Advertisement -

இருந்தாலும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் போது அதற்கு ஏற்றவாறு மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். ராகுல் ஐபிஎல் தொடர் முடிவடைந்த கையோடு குழந்தை பிறந்த சில தினங்களிலேயே இங்கிலாந்து வந்து இங்குள்ள சூழ்நிலை மற்றும் மைதானத்தின் தன்மை ஆகியவற்ற கருத்தில் கொண்டு பயிற்சியில் ஈடுபட்டார். அப்படி அவர் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டது மட்டுமின்றி இந்திய ஏ அணியுடன் இணைந்து பயிற்சி ஆட்டங்களில் விளையாடியிருந்தார்.

இதையும் படிங்க : என்னோட பெற்றோர் முன்னிலையில் இதை பூர்த்தி செய்ததில் மகிழ்ச்சி.. யாஷஸ்வி ஜெய்ஸ்வால் பேட்டி

இப்படி அவர் மேற்கொண்ட பயிற்சிகள் தான் இந்த தொடரில் அவரது சிறப்பான ஆட்டத்திற்கு காரணமாக பார்க்கிறேன். இந்த இங்கிலாந்து தொடரில் அவர் தனது திறனுக்கு ஏற்ப ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். ஆனாலும் இதைவிட பிரமாதமான ஆட்டம் இனிவரும் நாட்களில் அவரால் வெளிப்படுத்த முடியும் என அபிஷேக் நாயர் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -