இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது நாளை அக்டோபர் 29-ஆம் தேதி முதல் துவங்க இருக்கிறது. ஏற்கனவே இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி இழந்து விட்டதால் டி20 தொடரில் வெற்றி பெற்று அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தீவிரமாக தயாராகி வருகிறது.
அபிஷேக் சர்மா பார்ம்ல இருந்தா ஹேசல்வுட் பார்ம் அவுட் ஆகிடுவாரு : அபிஷேக் நாயர்
இந்நிலையில் எதிர்வரும் இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணியின் இளம் துவக்க வீரரான அபிஷேக் சர்மா மட்டும் பார்மில் இருந்தால் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜாஷ் ஹேசல்வுட் பார்ம் அவுட்டாகி விடுவார் என்று இந்திய அணியின் முன்னாள் உதவி பயிற்சியாளரான அபிஷேக் நாயர் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : அபிஷேக் ஷர்மாவின் பயமற்ற ஆட்டம் எந்த ஒரு பவுலரையும் செட்டிலாக விடாது. குறிப்பாக தற்போதைய ஆஸ்திரேலிய தொடரில் இந்திய வீரர்களுக்கு கஷ்டத்தை கொடுக்கும் ஜாஷ் ஹேசல்வுட்டை அபிஷேக் சர்மாவால் நிச்சயம் அடித்து விளையாட முடியும். அபிஷேக் ஷர்மா மட்டும் ஃபார்மில் இருந்தால் ஹேசல்வுட் பார்ம் அவுட் ஆகிவிடுவார்.
ஏனெனில் போட்டியின் முதல் பந்தில் இருந்தே பவுண்டரிகளை அடிக்கும் அவர் பவர் பிளேவில் பயமற்ற ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். இதன் காரணமாக அவர் முதல் 6 ஓவர்கள் வரை நின்று விட்டால் இந்திய அணி நிச்சயம் 60 முதல் 80 ரன்கள் குவிப்பார். அதோடு எதிரில் இருக்கும் பேட்ஸ்மேன்களின் அழுத்தத்தையும் அவர் குறைப்பார்.
அபிஷேக் சர்மா இப்படி தொடர்ந்து அதிரடியாக விளையாடி வருவது நிச்சயம் இந்திய அணிக்கும் பலமான ஒரு விடயம் தான். ஹேசல்வுட் ஆஸ்திரேலியாவில் உள்ள பவுன்ஸ் மற்றும் வேகத்தை பயன்படுத்திக்கொண்டு சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி இந்திய வீரர்களுக்கு தொந்தரவுகளை அளித்து வருகிறார். ஆனால் இம்முறை யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மட்டும் சரியான பார்மிலும், ரிதத்திலும் இருந்தால் நிச்சயம் அவரை அடித்து நொறுக்கி விடுவார்.
இதையும் படிங்க : “நான் அதிக வாய்ப்புகளுக்கு தகுதியானவன்” ஒரு தொடரோடு நீக்கியது ஏமாற்றம் – கருண் நாயர் பேச்சு
ஏற்கனவே ஐபிஎல் தொடரில் நல்ல அனுபவம் கொண்ட அவர் சமீபத்தில் தென்னாப்பிரிக்க தொடரிலும் சிறப்பாக செயல்பட்டார். அந்த நம்பிக்கையை தன்னுள் வைத்துக்கொண்டு ஆஸ்திரேலிய தொடரிலும் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் அபிஷேக் சர்மாவால் பெரிய ரன்களை அடிக்க முடியும் என அபிஷேக் நாயர் கூறியது குறிப்பிடத்தக்கது.



