- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஹார்டிக் பாண்டியாவின் அந்த திறமை இந்திய அணிக்கு மிகப்பெரிய ஸ்ட்ரென்த் – அபிஷேக் நாயர் பாராட்டு

இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் போது மிகச் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி கோப்பையை வெல்ல மிக முக்கிய காரணமாக இருந்தார். அதனை தொடர்ந்து நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக விளையாடியிருந்த அவர் மீண்டும் தற்போது 2025 ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார்.

ஹார்டிக் பாண்டியா ஒரு கேம் சேஞ்சர் : அபிஷேக் நாயர்

இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா ஆசிய கோப்பை தொடரில் முதன்மை வீரராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் அவரது திறனை பாராட்டி இந்திய அணியின் முன்னாள் துணை பயிற்சியாளரான அபிஷேக் சர்மா சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :

- Advertisement -

ஹார்டிக் பாண்டியா போன்ற ஒரு வீரர் இந்திய அணிக்கு கிடைத்த விலை மதிப்பில்லா வீரர். ஏனெனில் எத்தனை கிரிக்கெட் வீரர்களுக்கு ஹார்டிக் பாண்டியா போன்ற திறமை இருக்கும் என்று தெரியாது. ஹார்டிக் பாண்டியாவால் புதிய பந்தில் பந்துவீச முடியும். அதேபோன்று போட்டியின் இறுதி கட்டத்தில் டெத் ஓவர்களை பந்துவீச முடியும்.

அதோடு அனைத்து போட்டிகளிலும் நான்கு ஓவர்களை அவரால் வீச முடியும். அதுமட்டும் இன்றி பேட்டிங்கிலும் ஸ்பின்னர்கள், வேகப்பந்து வீச்சாளர்கள் என இரண்டு தரப்பினருக்கு எதிராகவும் அதிரடியை வெளிப்படுத்த முடியும். இப்படி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே முழு பலத்தையும் வைத்திருக்கும் அவர் நிச்சயம் இந்திய அணிக்கு ஒரு கேம் சேஞ்சர் என்று நான் கூறுவேன்.

- Advertisement -

பாண்டியாவிடம் இருக்கும் மிகப்பெரிய பலமே அவர் அணியில் இருந்தால் மற்ற வீரர்களுக்கு நம்பிக்கை கிடைக்கும். ஒரு வீரராக மட்டுமின்றி ஒரு லீடராகவும் அவர் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர். கடந்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடரை கைப்பற்றும்போது கூட அழுத்தமான சூழலில் மிகச் சிறப்பாக பந்துவீசி இருந்தார்.

இதையும் படிங்க : ரசிகர்கள் கம்பீர், அகர்கரை விமர்சிக்காம இந்திய அணிக்கு சப்போர்ட் பண்ணனும்.. இதான் காரணம்.. கவாஸ்கர் கோரிக்கை

அதேபோன்று தேவைப்படும் நேரத்தில் அதிரடியாக பேட்டிங் செய்தும் கொடுத்திருந்தார். அதுமட்டும் இன்றி கேப்டனுக்கு உதவியாக ஆலோசனைகளையும் ஒரு லீடராக வழங்கியிருந்தார் என ஹார்டிக் பாண்டியாவின் பங்களிப்பை பாராட்டி அபிஷேக் நாயர் பேசியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -