- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் அடிக்கப்போகும் பேட்ஸ்மேன் அவர்தான் – அபிஷேக் நாயர் கணிப்பு

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது வரும் அக்டோபர் 10-ஆம் தேதி டெல்லி அருண் ஜேட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இரண்டாவது போட்டியில் அதிக ரன்கள் அடிக்கப்போவது அவர்தான் : அபிஷேக் நாயர்

அதனைத் தொடர்ந்து நடைபெற இருக்கும் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றும் என்று பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் அடுத்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் அடிக்கப்போவது யார்? என்பது குறித்து முன்னாள் இந்திய அணியின் உதவி பயிற்சியாளரான அபிஷேக் தனது கணிப்பினை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் அவர் கூறியதாவது : என்னைப் பொருத்தவரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் துவக்க வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிக ரன்களை குவிப்பார் என்று நினைக்கிறேன்.

ஏனெனில் மிகச் சிறப்பாக விளையாடும் திறன் கொண்ட யாஷஸ்வி ஜெய்ஸ்வால் எப்போதுமே அதிக ரன்களை குவிக்க விரும்பவார். அதுமட்டும் இன்றி ரன் எடுக்கும் வேட்கையும் அவரிடம் அதிகமாக இருப்பதால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மிகப்பெரிய ரன்களை அவர் அடிக்க வாய்ப்புள்ளது.

- Advertisement -

டெஸ்ட் போட்டிகளை பொருத்தவரை அவர் கொஞ்சம் பந்துகளை எடுத்துக்கொண்டு செட்டாகி விட்டால் மிகப்பெரிய ஸ்கோரை நோக்கி செல்வார். அதனால் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அதிக ரன்களை குவிப்பார் என்று தான் கருதுவதாக அபிஷேக் நாயர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : கே.எல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவரும் நிகழ்த்தப்போகும் சாதனை – விவரம் இதோ

ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் கே.எல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜுரேல் ஆகியோர் சதம் அடித்து அசத்தியிருந்த வேளையில் அவர்களை தாண்டி யாஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிக ரன்களை இரண்டாவது போட்டியில் அடிப்பார் என்று அபிஷேக் நாயர் தனது கணிப்பினை வெளியிட்டுள்ளது ரசிகர்கள் மத்தியிலும் காணத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -