- Advertisement -
ஐ.பி.எல்

கே.கே.ஆர் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் அறிவிப்பு.. அதுவும் யார் தெரியுமா? – அடுத்த கப் ரெடியா?

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் தொடரில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியிருந்தது. இந்த வெற்றி ஆர்.சி.பி அணியின் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

கே.கே.ஆர் அணிக்கு புதிய பயிற்சியாளர் அறிவிப்பு :

அதேவேளையில் கடந்த 2024-ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரின் போது அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாம்பியன் படத்தை வென்றிருந்த கொல்கத்தா அணியானது இந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரின் போது 14 போட்டிகளில் விளையாடி வெறும் 5 வெற்றிகளை மட்டுமே பெற்று பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது.

- Advertisement -

இதன் காரணமாக அடுத்த 2026 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக சில மாற்றங்களை கே.கே.ஆர் அணி செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த சந்திரகாந்த் பண்டிட் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக புதிய தலைமை பயிற்சியாளராக அபிஷேக் நாயரை அந்த அணி கொண்டு வந்துள்ளதாக அதிகாரபூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே அபிஷேக் நாயர் கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் குழுவில் இருந்த வேளையில் தற்போது அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளராக மாறியிருக்கிறார். ஏற்கனவே இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்த அவரது பயிற்சியின் கீழ் பல்வேறு பேட்ஸ்மேன்கள் தங்களது திறனை வெளிபடுத்தியிருந்தனர்.

- Advertisement -

இந்நிலையில் கொல்கத்தா அணியிலும் அவர் தனது சிறப்பான பங்களிப்பை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பல்வேறு இளம் வீரர்களை பிரகாசிக்க வைத்த அவர் நிச்சயம் இம்முறை கே.கே.ஆர் அணிக்கு பயிற்சியளிக்க இருக்கும் வேளையில் அந்த அணி மீண்டும் கோப்பையை கைப்பற்றக்கூட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இதையும் படிங்க : தற்போதைய ஆஸ்திரேலிய அணிக்கு எந்த இந்திய வீரர் பொருத்தமாக இருப்பார்? – ஆடம் கில்க்ரிஸ்ட் பதில்

சமீபத்தில் கூடுதல் உடல் எடை காரணமாக கடுமையாக விமர்சிக்கப்பட்ட முன்னாள் இந்திய கேப்டனான ரோஹித் சர்மா கூட இவருடன் இணைந்து தான் உடல் எடையை குறைத்து மீண்டும் பிட்டாக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -