வெறும் 17 மேட்ச்சில் உலகின் நம்பர் ஒன்.. டிராவிஸ் ஹெட், விராட் கோலியை முந்தி அபிஷேக் சாதனை

Abishek Sharma 2
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான புதிய தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன் படி சர்வதேச டி20 போட்டிகளுக்கான டாப் 10 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியாவின் அபிஷேக் ஷர்மா 829 புள்ளிகளுடன் நம்பர் ஒன் இடத்திற்கு முன்னேறியுள்ளார். கடந்த வருடம் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அறிமுகமாகி டக் அவுட்டான அவர் அடுத்தப் போட்டியிலேயே சதத்தை அடித்து அசத்தினார்.

அப்போதுலிருந்தே கணிசமாக அசத்தி வந்த அவர் கடந்த இங்கிலாந்து தொடரில் மும்பையில் சதத்தை அடித்து பல சாதனைகளைப் படைத்து அசத்தினார். இதுவரை 17 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 535 ரன்களை 193.85 ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்துள்ளார். 2 சதங்கள் 2 அரை சதங்களை அடித்துள்ள அவர் ஏற்கனவே டாப் 10 பட்டியலில் இடம் பிடித்திருந்தார்.

- Advertisement -

ஹெட்டை முந்திய அபிஷேக்:

அந்த சூழ்நிலையில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நம்பர் ஒன் இடத்தில் இருந்த ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் சிறப்பாக விளையாடவில்லை. அதனால் அவரை முந்தியுள்ள அபிஷேக் சர்மா உலகின் புதிய நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக முன்னேறி சாதனை படைத்த இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். டிராவிஸ் ஹெட் 814 புள்ளிகளுடன் 2வது இடத்திற்கு சரிந்துள்ளார்.

மேலும் விராட் கோலி மற்றும் சூரியகுமாருக்கு பின் நம்பர் ஒன் ஐசிசி நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக முன்னேறிய இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். அத்துடன் 24 வயதிலேயே அபிஷேக் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக முன்னேறியுள்ளார். இதன் வாயிலாக விராட் கோலியை முந்தி ஐசிசி தரவரிசையில் இளம் வயதில் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேன் இடத்தைப் பிடித்த இந்திய வீரராகவும் அபிஷேக் சாதனைப் படைத்துள்ளார்.

- Advertisement -

விராட் கோலியை முந்தி:

அவருக்கு அடுத்தபடியாக திலக் வர்மா 3, சூரியகுமார் யாதவ் 6, ஜெய்ஸ்வால் 11வது இடங்களில் உள்ளார்கள். அதே போல டெஸ்ட் பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் மான்செஸ்டர் போட்டியில் அசத்திய சுந்தர் 65, ஜடேஜா 39வது இடங்களுக்கு முன்னேறியுள்ளார்கள். ரிஷப் பண்ட் 7, ஜெய்ஸ்வால் 8, கேப்டன் கில் 9வது இடத்தில் இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: 5வது டெஸ்டில் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் விலகல்.. புதிய கேப்டன் யார்? 4 மாற்றங்களை அறிவித்த இங்கிலாந்து அணி

இதைத்தொடர்ந்து இங்கிலாந்து மண்ணில் இந்தியா விரைவில் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. அதில் டி20 தொடரில் இந்திய அணிக்காக அபிஷேக் ஷர்மா விளையாட உள்ளார். அதே போல விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement