- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்திய அணியின் 3 பார்மேட்டுக்கும் சுப்மன் கில் கேப்டனாக மாறினால் செட்டாகாது – அபினவ் முகுந்த் கருத்து

இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரினை இந்திய அணி வென்று முடித்த கையோடு இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னதாக ரோகித் சர்மா சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்ததால் அவருக்கு பதிலாக இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டன் பொறுப்பை சுப்மன் கில்லுக்கு வழங்கி பிசிசிஐ அதிரடி காட்டியிருந்தது. அதனை தொடர்ந்து ஒருநாள் போட்டிகளுக்குமான இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் ரோகித் சர்மா நீக்கப்பட்டார்.

சுப்மன் கில் ஆல் பார்மேட் கேப்டனாக மாறினால் சரியாக இருக்காது : அபினவ் முகுந்த்

அவருக்கு பதிலாக ஒருநாள் போட்டிகளுக்குமான புதிய கேப்டனாகவும் சுப்மன் கில் அறிவிக்கப்பட்டு அவரது தலைமையிலேயே இந்திய அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. அதோடு டி20 போட்டிகளுக்கும் மீண்டும் கம்பேக் கொடுத்திருந்த அவர் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.

- Advertisement -

இதன் காரணமாக தற்போது ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருக்கும் சுப்மன் கில் விரைவில் சூரியகுமார் யாதவுக்கு பதிலாக டி20 போட்டிகளிலும் கேப்டனாக மாறி மூன்று வகையான இந்திய அணிக்கும் ஒரே கேப்டனாக இருப்பார் என்று தெரிகிறது. அதன் காரணமாகவே இந்திய அணி பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை சுப்மன் கில்லுக்கு சாதகமாகவும் எடுத்து வருவதாக பல்வேறு விமர்சனங்கள் இருந்து வருகின்றன.

இந்நிலையில் சுப்மன் கில் மூன்று வகையான இந்திய அணிக்கும் கேப்டனாக மாறினால் அது செட்டாகாது என்றும் ஸ்பிலிட் கேப்டன்சி முறையில் தனி கேப்டன் இருந்தால் மட்டுமே அது ஸ்மார்ட்டான மூவாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : சுப்மன் கில் எதிர்கால மூன்று வகையான இந்திய அணியின் கேப்டனாகவும் மாறுவார் என்ற எண்ணம் என்னிடமும் இருக்கிறது.

- Advertisement -

ஆனால் நான் அவரை மூன்று விதமான ஃபார்மேட்டுக்கும் கேப்டனாக பார்க்க விரும்பவில்லை. ஏனெனில் ஸ்பிலிட் கேப்டன்சி என்பதே இந்திய அணியை பொறுத்தவரை ஒரு சிறப்பான முறையாக இருக்கும். சுப்மன் கில்லை பொறுத்தவரை டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு டி20 போட்டிகளில் வேறு யாராவது கேப்டனாக செயல்பட வைக்கலாம்.

இதையும் படிங்க : வாஷிங்டன் சுந்தர் தொடர்ந்து 3 ஆம் இடத்தில் விளையாடினால் இந்த ஆபத்து ஏற்படும் – தினேஷ் கார்த்திக் எச்சரிக்கை

ஏனெனில் மூன்று வகையான இந்திய அணிக்கும் அவரே கேப்டனாக செயல்படும் பட்சத்தில் ஒரு தொடரில் ஏற்படும் தோல்வி அடுத்தடுத்த தொடர்களிலும் அவருக்கு பெரிய பாதிப்பை மன ரீதியாக உண்டாக்கும். அதுவே அவருக்கு அதிக அழுத்தத்தையும் ஏற்படுத்தும். எனவே ஸ்பிலிட் கேப்டன்சி பாணியில் ஒவ்வொரு ஃபார்மேட்டுக்கும் தனித்தனியே கேப்டன்கள் இருப்பதே சிறந்தது என்றும் அபினவ் முகுந்த் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -