- Advertisement -
இந்திய கிரிக்கெட்

IND vs BAN : அடுத்த போட்டியிலும் அந்த தம்பி விளையாட மாட்டாராம் – எதுக்குப்பா அவரை சேர்த்தீங்க?

பங்களாதேஷ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இழந்தது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் 188 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி பங்களாதேஷ் அணியை வீழ்த்தி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இவ்வேளையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது இன்னும் சில தினங்களில் டாக்கா நகரில் துவங்க உள்ளது. இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியிலும் கேப்டன் ரோஹித் சர்மா விளையாட மாட்டார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரின் இரண்டாவது போது தனது கட்டை விரலில் காயம் அடைந்த ரோகித் சர்மா மூன்றாவது போட்டியில் பங்கேற்காமல் நாடு திரும்பினார்.

- Advertisement -

ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான அணியில் அவரின் காயத்தின் தன்மையை அறிந்த பின்னரே விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்ட வேளையில் முதலாவது டெஸ்ட் போட்டியை காயம் காரணமாக தவறவிட்ட ரோகித் தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டியையும் காயம் குணமடையாத காரணத்தினால் தவற விட்டுள்ளார்.

இந்நிலையில் அவருக்கு பதிலாக இந்த பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மாற்று துவக்க வீரராக அணியில் இடம் பெற்ற அபிமன்யு ஈஸ்வரனுக்கு கடந்த போட்டியில் அறிமுக வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் கேப்டன் கே.எல் ராகுலுடன் சுப்மன் கில் துவக்க வீரராக களம் இறங்கினார்.

- Advertisement -

அப்படி களமிறங்கிய அவர் முதல் போட்டியிலேயே சதம் அடித்ததால் இரண்டாவது போட்டியில் அவரை கட்டாயம் அணியிலிருந்து நீக்க முடியாது. மேலும் கேப்டன் என்கிற காரணத்தினால் கே.எல் ராகுலையும் நீக்க முடியாது. எனவே இவர்கள் இருவருமே அடுத்த போட்டியிலும் துவக்க வீரர்களாக விளையாடுவார்கள்.

இதையும் படிங்க : IND vs BAN : 2 ஆவது போட்டியிலாவது அவருக்கு வாய்ப்பு குடுப்பீங்களா? – அதைப்பத்தி பேசவே மாட்றீங்க

இதன் காரணமாக ரோகித்திற்கு மாற்றுவீரராக அணியில் சேர்க்கப்பட்ட அபிமன்யு ஈஸ்வரன் வங்கதேச தொடரில் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவர் இங்கு வந்ததே வேஸ்டுதான் என்றும் அவர் அடுத்த போட்டியிலும் வெளியில் தான் அமர்வார் என்பது உறுதியாகி உள்ளது.

- Advertisement -
Published by