IND vs BAN : 2 ஆவது போட்டியிலாவது அவருக்கு வாய்ப்பு குடுப்பீங்களா? – அதைப்பத்தி பேசவே மாட்றீங்க

IND-vs-BAN
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது பங்களாதேஷ் நாட்டில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இழந்த வேளையில் இந்த டெஸ்ட் தொடரில் அந்த தோல்விக்கு பழி தீர்க்கும் விதமாக இந்திய அணி தொடரை கைப்பற்ற காத்திருக்கிறது.

SHreyas Iyer vs BAN

- Advertisement -

அந்த வகையில் இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முடிந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேறியதால் அவருக்கு பதிலாக ஜெய்தேவ் உனட்கட் நீண்ட வருடங்களுக்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்பட்டார்.

unadkat

இப்படி இந்திய அணியில் இருந்து அழைப்பு கிடைத்ததும் தனது இரண்டாவது போட்டியில் விளையாட காத்திருந்த அவரால் முதல் போட்டியில் பங்கேற்க முடியாமல் போனது. கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து அவருக்கு கிடைத்த இந்த வாய்ப்பின் முதலாவது போட்டியில் அவர் விளையாடவில்லை.

- Advertisement -

ஏனெனில் திடீரென அவர் இந்திய அணிக்கு அழைக்கப்பட்டதால் பங்களாதேஷ் விசா கிடைக்காமல் அவர் முதல் போட்டிக்கு முன்னதாக இந்தியாவிலேயே தங்க நேர்ந்தது. ஆனால் அவர் இரண்டாவது போட்டிக்கான இந்திய அணியுடன் இணைந்து விட்டாரா? அவர் பங்களாதேஷ் சென்று விட்டாரா? அடுத்த போட்டியில் விளையாடுவாரா? என்பது குறித்த எந்த ஒரு அறிவிப்பையும் இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ இதுவரை வெளியிடவில்லை.

இதையும் படிங்க : ஐபிஎல் 2023 ஏலத்தில் சென்னை அணிக்கு காத்திருக்கும் 3 பெரிய பிரச்சனை மிகுந்த சவால்கள் – அலசல் பதிவு

இருப்பினும் உள்ளூர் கிரிக்கெட்டில் பல ஆண்டுகாலமாக அசத்தலாக விளையாடி மீண்டும் இந்திய அணியில் விளையாட ஆசைப்படும் அவருக்கு ஒரு வாய்ப்பாவது வழங்கி இரண்டாவது போட்டியில் விளையாட வைக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement