- Advertisement -
இந்திய கிரிக்கெட்

வருத்தமாக தான் இருக்கு.. ஆனா.. டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்காதது குறித்து – அபிமன்யூ ஈஸ்வரன் வெளிப்படை

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது துவக்க ஆட்டக்காரரான அபிமன்யு ஈஸ்வரன் சேர்க்கப்படாதது பல்வேறு விமர்சனங்களை விமர்சகர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருந்தது. ஏனெனில் கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய டெஸ்ட் அணியில் தொடர்ந்து பயணித்து வந்த அவருக்கு நிச்சயம் அறிமுக வாய்ப்பு விரைவில் வழங்கப்படும் என்று கூறப்பட்டு வந்தது.

இந்திய அணியில் இடம் கிடைக்காதது வருத்தம் தான் : அபிமன்யூ ஈஸ்வரன்

ஆனால் இந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவருக்கு இடம் கிடைக்காததன் மூலம் இனிவரும் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் எதிர்கால திட்டங்களிலும் அவர் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக இனிவரும் டெஸ்ட் தொடர்களிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா? கிடைக்காதா? என்பது சந்தேகமாகியுள்ளது.

- Advertisement -

கடந்த 2013-ஆம் ஆண்டு உள்ளூர் கிரிக்கெட்டில் பெங்கால் அணிக்காக அறிமுகமான அவர் கடந்த பல ஆண்டுகளாகவே உள்ளூர் போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் டெஸ்ட் வாய்ப்புக்காக காத்திருக்கிறார். ஆனால் எவ்வளோவோ போராடியும் அவருக்கு இதுவரை வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில் தற்போது வரை தனக்கு இந்திய அணியில் அறிமுக வாய்ப்பு கிடைக்காதது குறித்து சில கருத்துக்களை அபிமன்யு ஈஸ்வரன் வெளிப்படையாக பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறியதாவது : சில சமயங்களில் எனக்கு வாய்ப்பு கிடைக்காததை நினைத்து வருத்தமாகவே இருக்கிறது. ஆனாலும் நான் தொடர்ந்து இந்திய அணியில் இடம்பெற வேண்டி முயற்சி செய்து வருகிறேன்.

- Advertisement -

இந்திய அணிக்காக விளையாடி வெற்றியில் பங்களிக்க வேண்டும் என்பதே என்னுடைய கனவு. ஆனால் எனக்கான வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை. இருந்தாலும் என்னைச் சுற்றி குடும்பம், நண்பர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் என அவர்களிடம் இருந்து எனக்கு கிடைக்கும் ஆதரவு என்பது என்னை வலிமையாக்குகிறது.

இதையும் படிங்க : சி.எஸ்.கே அணிக்கு வரும் ப்ரித்வி ஷா.. முக்கிய காரணமே இதுதானாம்.. டிரையல்ஸ் முடிஞ்சாச்சு – விவரம் இதோ

அவர்களே என்னை உற்சாகமாக வைத்திருக்க உதவுகிறார்கள். நான் தற்போது நல்ல மனநிலைடன் இருக்கிறேன். எதிர்வரும் ரஞ்சி கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட ஆவலோடு காத்திருக்கிறேன் என அபிமன்யு ஈஸ்வரன் பேசியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -