15 பேர் 961 நாட்கள்.. இந்திய அணி, பிசிசிஐ அபிமன்யுவை மன உளைச்சலுக்கு ஆளாக்கிட்டாங்க.. அப்பா குமுறல் பேட்டி

Abhimanyu Easwaran 2
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 5வது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் ஜூலை 31ஆம் தேதி துவங்கியது. அந்தப் போட்டியிலும் குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் விளையாடும் வாய்ப்பை பெறாதது பலருக்கும் ஏமாற்றமாக அமைந்தது. அதே போல அபிமன்யு ஈஸ்வரன் மீண்டும் பெஞ்சில் அமர்ந்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது பலரையும் பரிதாபமடைய வைக்கிறது.

உள்ளூரில் கடந்த பல வருடங்களாக சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் முதல் முறையாக 2021ஆம் ஆண்டு இதே இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் பேக்-அப் வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அத்தொடரில் வாய்ப்பை பெறாத அவர் 2022 வங்கதேச தொடரில் முதன்மை அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அப்போதிலிருந்து சுமார் 5 வருடங்களாக பெஞ்சில் அமர்ந்திருக்கும் அவருக்கு இந்திய அணி அறிமுக வாய்ப்பை வழங்கவில்லை.

- Advertisement -

மன உளைச்சலில் ஈஸ்வரன்:

இத்தனைக்கும் அவருக்கு பின் கே.எஸ். பரத், சூரியகுமார் யாதவ், முகேஷ் குமார், ரஜத் படிதார், தேவ்தூத் படிக்கல் உட்பட 15 வீரர்கள் இந்தியாவுக்காக அறிமுகமாகி விட்டார்கள். ஆனால் அவர்களுக்கு முன்பாக தேர்வான ஈஸ்வரன் இந்தியாவுக்காக விளையாடுவதற்காக 961 நாட்களாக தவமாய் காத்திருக்கிறார். இந்நிலையில் இந்திய அணி மற்றும் பிசிசிஐ காத்திருக்க வைத்தே தம்முடைய மகன் அபிமன்யுவை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளதாக அவருடைய தந்தை ரங்கநாதன் ஈஸ்வரன் குமுறலுடன் விமர்சித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அபிமன்யு டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகும் நாட்களை நான் எண்ணிக் கொண்டிருக்கவில்லை. வருடங்களை எண்ணி கொண்டிருக்கிறேன். அது 3 வருடங்களாகி விட்டது. ரன்கள் அடிப்பதே ஒரு வீரரின் வேலையாகும். அவர் அதை செய்துள்ளார். கடந்த ஆஸ்திரேலிய தொடரில் நடைபெற்ற 2 இந்தியா ஏ போட்டிகளில் அவர் நன்றாக செயல்படவில்லை என்று மக்கள் சொல்கிறார்கள்”

- Advertisement -

அப்பா குமுறல்:

“அது நியாயமானது. ஆனால் அத்தொடருக்கு முன்பாக அபிமன்யு உள்ளூரில் அசத்திய போது கருண் நாயர் இந்திய அணியிலேயே இல்லை. இராணி அல்லது துலீப் கோப்பை என்று நினைக்கிறேன், அதில் அபிமன்யு 864 ரன்கள் அடித்தார். எனவே எப்படி நீங்கள் அவரை கருண் நாயருடன் ஒப்பிடலாம் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. 800+ ரன்கள் அடித்த கருணுக்கு அவர்கள் நம்பி நியாயமான வாய்ப்பை வழங்குகின்றனர்”

இதையும் படிங்க: சதமடிச்சும் ஜெய்ஸ்வால் இப்போ தடுமாற இந்த டெக்னிக் தவறே காரணம்.. கம்பீர் எடுத்து சொல்லனும்.. கவாஸ்கர் அட்வைஸ்

“என் மகன் கொஞ்சம் மன உளைச்சல் ஆகியுள்ளான். இது நடக்கும். சில வீரர்கள் ஐபிஎல் தொடரில் அசத்தியதால் நேரடியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இடம் பெறுகின்றனர். உண்மையில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஐபிஎல் தொடரை மையமாக வைத்து யாரையும் தேர்ந்தெடுக்கக்கூடாது. ரஞ்சி, துலீப், இராணிக் கோப்பைகளை பார்த்து வீரர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்” எனக் கூறினார்.

Advertisement