சதமடிச்சும் ஜெய்ஸ்வால் இப்போ தடுமாற இந்த டெக்னிக் தவறே காரணம்.. கம்பீர் எடுத்து சொல்லனும்.. கவாஸ்கர் அட்வைஸ்

Sunil Gavaskar Jaiswal 2
- Advertisement -

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்தியா 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என இங்கிலாந்து முன்னிலையில் இருக்கும் அத்தொடரின் கடைசிப் போட்டி ஜூலை 31ஆம் தேதி ஓவலில் துவங்கியது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடும் இந்தியா முதல் நாள் முடிவில் 204/6 ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் 2, ராகுல் 14, கேப்டன் கில் 21, ஜடேஜா 9, துருவ் ஜுரேல் 19 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். சுதர்சன் 38 ரன்னில் அவுட்டான நிலையில் களத்தில் கருண் நாயர் 52*, வாஷிங்டன் சுந்தர் 19* ரன்களுடன் விளையாடி வருகிறார்கள். முன்னதாக இந்திய அணியின் இளம் நம்பிக்கை நட்சத்திர பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால் இத்தொடரின் முதல் போட்டியிலேயே சதத்தை அடித்தார்.

- Advertisement -

சதமடித்தும் தடுமாறும் ஜெய்ஸ்வால்:

அதனால் தொடர்ச்சியாக அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் 2வது போட்டியில் 80+ ரன்கள் எடுத்தார். கடந்த போட்டியின் 2வது இன்னிங்ஸில் 58 ரன்களை அடித்த அவர் மற்ற அனைத்து இன்னிங்ஸ்களும் பெரிய ரன்களை அடிக்காமல் ஏமாற்றத்தைக் கொடுத்தார். குறிப்பாக இப்போட்டியிலும் 2 ரன்னில் அவுட்டான அவர் இந்திய அணிக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தார்.

இந்நிலையில் முதல் போட்டியிலேயே சதத்தை அடித்த ஜெய்ஸ்வால் அடுத்தப் போட்டிகளில் தடுமாற அவருடைய பேட்டிங் டெக்னிக்கல் பிரச்சனை இருப்பதே காரணமென்று ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். எனவே அதைப் பற்றி ஜெய்ஸ்வாலிடம் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் போன்றவர்கள் எடுத்துச் சொல்ல வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இது பற்றி கவாஸ்கர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

கவாஸ்கர் அறிவுரை:

“ஜெய்ஸ்வால் ஆட்டத்தில் கொஞ்சம் நிச்சயமாற்ற தன்மையும் நம்பிக்கையின்மையும் ஏற்பட்டுள்ளது. முதல் போட்டியில் சதத்தை அடித்த அவர் அதன் பின் சரளமாகத் தெரியவில்லை. அதனாலேயே அவருடைய முன் பாதம் பின்னோக்கி பெறவில்லை. ஆனால் அவர் ஒரு நல்ல வீரர். யாரேனும் ஒருவர் அவருடன் அமர்ந்து சில டெக்னிக்கல் அம்சங்களில் முன்னேற வேண்டிய விஷயத்தைப் பற்றி சொல்ல வேண்டும்”

இதையும் படிங்க: அவங்க இல்லாததால் இந்தியாவை சாய்க்க.. வேற வழியில்லாம இங்கிலாந்து பச்சை பிட்ச்சை போட்ருக்காங்க.. சுனில் கவாஸ்கர்

“குறிப்பாக அவரது முன் பாதத்தை முன்னோக்கி நகர்த்துவது மற்றும் அவரது தோள்பட்டை அதிகமாக திறக்காமல் இருப்பது பற்றி பேசுவது அவருக்கு உதவும் என்று நினைக்கிறேன். தற்சமயத்தில் அவருடைய பின் தோள்பட்டை முதல் அல்லது 2வது ஸ்லிப் பகுதியை நோக்கி சாய்வாக செல்கிறது. அதுவே பேட்டை நேராக கீழே கொண்டு கொண்டு வர கடினப்படுத்துகிறது. எனவே அவருடைய தோள்பட்டை விக்கெட் கீப்பர் அல்லது முதல் ஸ்லிப் பகுதியை நோக்கி அதிகமாக இருந்தால் பேட் நேராக கீழே வரும்” என்று கூறினார்.

Advertisement