இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் வாய்ப்புக்காக நீண்ட காலமாக காத்திருக்கும் இளம் வீரரான அபிமன்யு ஈஸ்வரனுக்கு இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் நிச்சயம் ஏதாவது ஒரு போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அண்மையில் நடைபெற்று முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரை இந்திய அணி இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்த வேளையில் இந்த தொடரிலும் அவருக்கு ஒரு வாய்ப்பு கூட வழங்கப்படாதது அபிமன்யு ஈஸ்வரனுக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது.
தனது மகனின் வாய்ப்பு குறித்து பேசிய : அபிமன்யு ஈஸ்வரனின் தந்தை
ஏனெனில் நீண்ட ஆண்டு காலமாக தனது அறிமுக வாய்ப்புக்காக காத்திருக்கும் அவருக்கு ஏதாவது ஒரு போட்டியில் வாய்ப்பு கொடுத்திருக்கலாம். ஆனால் திறமையான வீரரான அவருக்கு இதுவரை ஒரு வாய்ப்பு கூட வழங்காமல் இந்திய அணியின் நிர்வாகம் அவரை நோகடித்து வருகிறது. இந்திய ஏ அணியின் கேப்டனாக இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அபிமன்யு ஈஸ்வரன் பயிற்சி போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
அதனால் எப்படியும் இந்த தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்த்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில் இந்த இங்கிலாந்து தொடரிலும் தனது மகனுக்கு வாய்ப்பு கிடைக்காதது குறித்து வருத்தம் தெரிவித்துள்ள அபிமன்யு ஈஸ்வரனின் தந்தை விக்கி லால்வாணி தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : இந்திய ஏ அணிக்காக அபிமன்யு ஈஸ்வரன் தென்னாப்பிரிக்க நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய போது அங்கு தரமான பந்துவீச்சுக்கு எதிராக சதம் அடித்து அசத்தியிருந்தார். அந்த தொடரில் புஜாரா விளையாடவில்லை என்பதனால் நிச்சயம் அந்த தொடரிலேயே அவர் அறிமுக வாய்ப்பை பெறுவார் என்று எதிர்பார்த்தேன்.
ஆனால் அப்போது அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. பின்னர் தொடர்ந்து இந்திய அணியுடன் அவர் இணைந்து பயணித்து வரும்போதும் அவருக்கு இதுவரை வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒருவேளை எனது மகன் ஐபிஎல் போட்டிகளில் விளையாடியிருந்தால் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டு இருப்பார் என்று நினைக்கிறேன்.
இதையும் படிங்க : கவலைப்படாதீங்க அபிமன்யு.. வாய்ப்பு மட்டுமல்ல இந்திய அணியில் இதுவும் உங்களுக்கு கிடைக்கும் – கம்பீர் வாக்குறுதி
ஆனால் ஐ.பி.எல் போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் இங்கிலாந்து தொடர் முடிந்த கையோடு விரைவில் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் அதுவும் நிச்சயம் நீண்ட ஒரு வாய்ப்பாக இருக்கும் என கௌதம் கம்பீர் அபிமன்யு ஈஸ்வரனுக்கு உறுதியளித்துள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.



