பாண்டியாவை விட அப்துல் ரசாக் தான் பெஸ்ட் ஆல் ரவுண்டர்.. இதனால் மறைஞ்சு போய்ட்டாரு.. ஹபீஸ் கருத்து

Mohammad Hafeez
- Advertisement -

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கோப்பையை ரோஹித் சர்மா தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்தது. அதையும் சேர்த்து 3 சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பைகளை வென்ற முதல் அணி என்ற உலக சாதனையை இந்தியா படைத்தது. ஏற்கனவே 2024 டி20 உலகக் கோப்பையையும் இந்தியா கடந்த ஜூன் மாதம் வென்று சாதனை படைத்தது.

அதனால் 10 மாதங்களுக்குள் 2 ஐசிசி கோப்பைகளை வென்று இந்தியா தங்களது திறமையை நிரூபித்து வருகிறது. இந்தியாவின் அந்த 2 வெற்றிகளுக்குமே ஹர்திக் பாண்டியா மிகச் சிறந்த ஆல் ரவுண்டராக விளையாடி முக்கிய பங்காற்றினார். குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கடைசி ஓவரை வீசிய பாண்டியா வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

- Advertisement -

ரசாக் சிறந்தவர்:

அதை விட 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் ஜஸ்ப்ரித் பும்ரா காயத்தால் விளையாடவில்லை. அதனால் தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணிக்கு முகமது ஷமியுடன் சேர்ந்து வேகப்பந்து வீச்சுத் துறையில் அசத்திய பாண்டியா பேட்டிங்கில் முக்கிய ரன்களை அதிரடியாக எடுத்து வெற்றிக்கு உதவினார். அதனால் தன்னை வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் சிறந்த ஆல் ரவுண்டர் என்பதை பாண்டியா மீண்டும் நிருபித்துள்ளார்.

இந்நிலையில் ஹர்திக் பாண்டியாவை விட தங்கள் நாட்டின் அப்துல் ரசாக் சிறந்த ஆல் ரவுண்டர் என்று முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் முகமது ஹபீஸ் பெருமை பாடியுள்ளார். ஏனெனில் பாண்டியா 2 ஐசிசி கோப்பைகளை வெல்ல உதவினார். ஆனால் ரசாக் தனது கேரியரில் ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்லவில்லை. இருப்பினும் பாகிஸ்தான் வாரியம் சரியான வாய்ப்புகளை கொடுக்காததால் ரசாக் புகழ் மறைந்து போனதாக ஹபீஸ் கூறியுள்ளார்.

- Advertisement -

ஹபீஸ் உருட்டு:

இது பற்றி ஹபீஸ் பேசியது பின்வருமாறு. “அப்துல் ரசாத் செயல்பாடுகளின் விவரங்களை நீங்கள் எடுத்துப் பாருங்கள். அவர் சிறந்த பெரிய செயல்பாடுகளை வெளிப்படுத்தக் கூடியவராக இருந்தார். ஆனால் சிஸ்டம் அவரை சரியாகக் கவனித்துக் கொள்ளவில்லை. அந்த வீரரும் சரியாக பதில் கொடுக்கவில்லை. ரசாக் வெளிப்படுத்திய செயல்பாடுகளை பார்த்த வரை அவர் பாண்டியாவின் இந்த வெர்ஷனை விட சிறந்தவர்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: காயம்பட்ட புலியா இங்கிலாந்து காத்திருக்காங்க.. இந்தியா இந்த பலவீனத்தை சரிசெய்யனும்.. சித்து எச்சரிக்கை

முன்னதாக விராட் கோலியை விட பாபர் அசாம் சிறந்தவர் என்று ஹபீஸ் போன்ற பல முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் பாராட்டி பேசினர். ஆனால் அந்தப் புகழ்ச்சியில் சுமாராக விளையாடிய பாபர் அசாம் பாகிஸ்தானின் தோல்விக்கு காரணமாக அமைந்தார். அதனால் விராட் கோலி தான் உண்மையான கிங் என்று இதே ஹபீஸ் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement