ஒரு வெற்றியோடு முதலிடம் மட்டும் போதாது. எங்கள் அணியின் இலக்கு இதுதான் – ஏ.பி.டி அதிரடி

ABD
- Advertisement -

ஐபிஎல் தொடரில் எப்போதும் இல்லாத வகையில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி அற்புதமாக விளையாடி வருகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற ஜாம்பவான் அணிகள் தங்களது உண்மையான ஆட்டத்தை வெளிப்படுத்த இழந்து கடைசி இடத்தில் இருக்கின்றன. இந்த வருடமும் கடைசி இடத்தைப் பிடிக்கப் போகிறது என்று எதிர்பார்க்கப்பட்ட பெங்களூரு அணி மற்ற அனைத்து அணிகளையும் விரட்டிக் கொண்டிருக்கிறது.

rcb

- Advertisement -

10 போட்டிகளில் விளையாடி 7 போட்டிகளில் தற்போது வரை வெற்றி பெற்று 14 புள்ளிகளை பிடித்து புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துவிட்டது. முதலிடத்தில் இருக்கம் டெல்லி அணிக்கும் பெங்களூரு அணிக்கும் இடையே கடும் போட்டி இருக்கும். நேற்று கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் அந்த அணியின் பந்து வீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்டு 85 ரன்களுக்குள் கொல்கத்தா அணியை சுருட்டியது.

பின்னர் ஆடிய பெங்களூரு அணி அபாரமாக விளையாடி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டி முடிந்த பின்னர் பேசிய பெங்களூரு அணியின் துணை கேப்டன் ஏபி டி வில்லியர்ஸ் கூறியதாவது…

Morris

இந்த வெற்றியோடு நாங்கள் விட்டுவிட போவதில்லை. புள்ளி பட்டியலில் முதலிடத்தை தொடர்ந்து தக்கவைத்து பிளே ஆப் சுற்றுக்கு செல்வதும் தான். அதுமட்டுமின்றி அதனைத் தாண்டியும் பல சாதனைகள் பெங்களூரு அணியால் படைக்க முடியும் இந்த செய்தியை அனைத்து அணிகளும் உணரட்டும்.

இந்த செய்தியை அனைத்து அணிகளுக்கும் நாங்கள் வெளிப்படையாக தெரிவிக்கிறோம் என்று ஏபி டிவில்லியர்ஸ் கூறியுள்ளார். 12 ஐபிஎல் தொடர்களில் விளையாடியுள்ள பெங்களூர் அணி தற்போது வரை மூன்று முறை இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளது அவ்வளவுதான் அதில் ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை.

Advertisement