- Advertisement -
ஐ.பி.எல்

வைபவ் சூர்யவன்ஷியை நான் இந்த அணியில் பார்க்க விரும்புகிறேன் – ஏ.பி.டி கருத்து

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 2025 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் போது 14 வயதில் அறிமுகமான வைபவ் சூர்யவன்சி மிக இளம் வயதில் ஐ.பி.எல் போட்டிகளில் அறிமுகமான வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். அதோடு அதே ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போது குறைந்த பந்துகளில் சதம் அடித்து அதிவேக சதம் அடித்த இந்திய வீரர் என்பது மட்டுமின்றி ஐபிஎல் போட்டிகளில் குறைந்த வயதில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையும் நிகழ்த்தி இருந்தார். அந்தத் தொடரில் அவரது ஆட்டம் பிரமாதமாக இருக்க அவருக்கு பாராட்டுக்கள் அப்போதே குவிந்திருந்தது.

வைபவ் சூர்யவன்ஷி குறித்து பேசிய ஏ.பி.டி :

அதுமட்டும் இன்றி கடந்த ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு 19 வயதுக்கு உட்பட்டோர் இந்திய அணியில் இணைந்து விளையாடிய வைபவ் சூரியவன்சி 19 வயதுக்கு உட்பட்டோர் இந்திய அணி உலக கோப்பையை வெல்லவும் மிக முக்கியமான காரணமாக திகழ்ந்தார். அதனை தொடர்ந்து தற்போது 2026 ஐபிஎல் தொடரிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக நிரந்தர துவக்க வீரராக களமிறங்கி அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார்.

- Advertisement -

இதுவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இந்த ஆண்டு 11 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் இரண்டு சதம் மற்றும் இரண்டு அரைசதம் என 440 ரன்கள் குவித்து அசத்தியுள்ள வேளையில் இனிவரும் போட்டிகளிலும் அவரது ஆட்டம் மிகச் சிறப்பாக இருக்கும் என்று பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. ஏற்கனவே இவர் விளையாடி வரும் விதத்தை பார்த்து முன்னாள் வீரர்கள் பலரும் இந்திய அணிக்கு அவரை விரைவில் தேர்வு செய்ய வேண்டும் என்ற கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ராஜஸ்தான் அணிக்காக அதிரடியாக விளையாடி வரும் 15 வயது வீரரான வைபவ் சூரியவன்ஷி ஒருநாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதை பார்க்க தான் ஆவலாக இருப்பதாக தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஏ.பி.டி சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : வைபவ் சூர்யவன்சி கிரிக்கெட்டின் அனைத்து வடிவத்திலும் விளையாட வேண்டும். ஏனெனில் அவருக்குள் இருக்கும் திறமைகளை அவர் கண்டறிய வேண்டுமெனில் அனைத்து வகையான போட்டிகளிலும் அவர் விளையாடுவது அவசியம்.

- Advertisement -

இதையும் படிங்க : ஷிகர் தவான் மற்றும் விராட் கோலி ஆகியோரை தொடர்ந்து 3 ஆவது இந்திய வீரராக – சாய் சுதர்சன் நிகழ்த்திய சாதனை

ஒருநாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் அவருக்கு கடினமான பாதையாக இருக்கலாம். ஆனாலும் அனைத்து தடைகளையும் தகர்த்து முன்னேறி செல்லும் அளவிற்கு அவரிடம் திறமை உள்ளது. அந்தப் பாதையில் சிறப்பாக செயல்பட்டு கடினமான இந்த பயணத்தில் நிச்சயம் அவர் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கட்டில் விளையாட முயற்சிப்பார் என்று தான் நம்புவதாக ஏ.பி.டி கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -