ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து எப்போது ஓய்வு ? ஹின்ட் கொடுத்த ஏ.பி.டி – நல்ல விஷயம் தான்

ABD

ஒரு சில வீரர்களுக்கு வயது ஆக ஆக அவர்களது ஆட்டம் இன்னும் சிறப்பாக மாறிக்கொண்டே இருக்கும். அந்த வகையில் தற்போது பெங்களூரு அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக விளையாடி வரும் ஏபி டிவில்லியர்ஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து 2018ஆம் ஆண்டு ஓய்வு அறிவித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து இருந்தாலும் அதன் பிறகு அவர் ஐபிஎல் டி20 தொடரில் விளையாடி வரும் ஆட்டம் என்பது அசத்தலாக இருந்து வருகிறது.

இன்றளவும் உலகின் மிக அபாயகரமான பேட்ஸ்மேனாக வலம் வரும் ஏ.பி.டி தனது அற்புதமான கிரிக்கெட் மூலம் ரசிகர்களை வியக்க வைத்து வருகிறார். பொதுவாகவே கிரிக்கெட் வீரர்கள் 35 வயதைக் கடந்த உடன் எப்போது ஓய்வு பெறுவார்கள் என்ற கேள்வி தான் அவர்களை சுற்றிக்கொண்டே இருக்கும்.

- Advertisement -

அந்த வகையில் தற்போது 37 வயதான ஏபி டிவில்லியர்ஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதால் எப்பொழுது அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவார் என்ற கேள்வி அவரை சுற்றிக்கொண்டே இருக்கிறது. இருப்பினும் ஆர்சிபி அணியின் முக்கிய வீரராக விளங்கும் ஏபிடி பெங்களூரு அணி பெற்ற பல வெற்றிகளுக்கு தனிப்பட்ட ஒரு நபராக காரணமாக இருந்துள்ளார்.

abd

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் பேசிய ஏபிடி ஐபிஎல் போட்டியில் இருந்து எப்போது ஓய்வு பெறுவேன் என்பது குறித்து சில ஹின்ட்களை கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ஐபிஎல் போட்டிகளில் ஒரு சில ரெக்கார்டுகளை ரசிகர்கள் முன்பு படைக்கவேண்டும். அதுமட்டுமின்றி அணியில் உள்ள வீரர்களும் இதனை சில முறை பார்க்கவேண்டும் என அவர் அதில் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தற்போது இவர் ஓய்வு பெற மாட்டார் என்றும் இன்னும் ஒரு சில ஆண்டுகள் கிரிக்கெட் இவருக்கு பாக்கி இருப்பதாகவும் அவர் அதன் மூலம் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

எனவே நிச்சயம் அடுத்த சில ஆண்டுகள் ஏபிடி விளையாடுவது உறுதியாகி உள்ளது. அதுமட்டுமின்றி ஏற்கனவே நடைபெற்று ஒத்தி வைக்கப்பட்டுள்ள இந்த வருட ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள ஆட்டங்களில் அவர் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement