IPL 2023 : எனக்கும் மறுபடியும் ஆர்.சி.பி அணிக்காக விளையாடனும்னு ஆசை தான். ஆனா.. – மனம்திறந்த ஏ.பி.டி

ABD
- Advertisement -

உலக கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த 2023-வது ஆண்டிற்கான பதினாறாவது ஐபிஎல் தொடரானது இன்னும் சில தினங்களில் கோலாகமாக துவங்க உள்ளது. இந்நிலையில் தற்போது இந்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக அனைத்து அணிகளுமே தங்களது அணியின் வீரர்களை தீவிரமாக தயார் செய்து வருகின்றனர். அதேபோன்று பெங்களூரு அணியும் தற்போது முழுவீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த ஐபிஎல் 2023-ஆவது ஆண்டு சீசனுக்கு முன்னதாக பெங்களூரு அணிக்காக பல ஆண்டுகாலம் விளையாடி மிகச் சிறப்பான பங்களிப்பை அளித்த ஏ.பி.டி வில்லியர்ஸ் மற்றும் கிரிஸ் கெயில் ஆகியோருக்கு பெங்களூர் அணியின் நிர்வாகம் சார்பில் “ஹால் ஆப் தி ஃபேம்” கௌரவம் வழங்கப்பட்டது.

- Advertisement -

அதோடு அவர்களது முன்னிலையில் எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் இந்த ஆண்டிற்கான பெங்களூரு அணியின் ஜெர்சியினை வெளியீட்டு விழாவினை நடத்தி இருந்தனர். இந்த ஜெர்சி வெளியீட்டு விழாவில் பங்கேற்ற கிரிஸ் கெயில் மற்றும் ஏ.பி.டி வில்லியர்ஸ் ஆகியோரிடம் ஐபிஎல் தொடரில் மீண்டும் பெங்களூரு அணிக்காக விளையாடும் ஆசை இருக்கிறதா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கெயில் கூறுகையில் : நிச்சயமாக நான் விளையாட தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்தார்.

அதேவேளையில் தனது கருத்தினை வெளிப்படுத்திய ஏபிடி கூறுகையில் : எனக்கும் பெங்களூரு அணிக்காக விளையாட ஆசைதான். ஆனால் தற்போது பெங்களூரு அணி மிகச் சிறப்பான வீரர்களை கொண்டுள்ளதாக நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரை இந்த பெங்களூரு அணியில் எனக்கும் கெயிலுக்கும் சரி இடம் கிடைக்காது என்று நினைக்கிறேன். இம்முறை நாங்கள் பெங்களூரு அணியின் ரசிகர்களாக இருந்து பெங்களூர் அணி கோப்பையை வெற்றி பெறுவதை பார்க்க விரும்புகிறோம் என ஏ பி டி வில்லியர்ஸ் தெரிவித்தார்.

ABD

ஏபிடி மற்றும் கிரிஸ் கெயில் ஆகியோர் பெங்களூரு அணிக்காக அளித்த பங்களிப்பை கருத்தில் கொண்டு அவர்களுக்கு “ஹால் ஆப் தி பேம்” கவுரவத்தினை வழங்கியது மட்டும் இன்றி அவர்கள் இருவரது ஜெர்ஸி எண்ணான 17 மற்றும் 333 ஆகியவற்றை ரிட்டயர் செய்து இனி யாரும் அந்த எண்ணை பயன்படுத்த முடியாது என்றும் அது அவர்களது பங்களிப்பிற்கான மரியாதையை என்றும் ஆர்.சி.பி அணி நிர்வாகம் அறிவித்தது.

- Advertisement -

பின்னர் தனது மனதிற்கு மிக நெருக்கமான ஆர்.சி.பி அணி குறித்து பேசிய ஏபிடி கூறுகையில் : எனக்கு நிறைய நினைவுகள் பெங்களூரு மைதானத்தில் இருக்கிறது. பெங்களூரு அணியின் ரசிகர்களுக்கு மத்தியில் விளையாடும் போது மிகச் சிறப்பாக இருக்கும். உலகத்திலேயே என்னை பொருத்தவரை பெங்களூரு அணியின் ரசிகர்கள் தான் மிகச்சிறந்த ரசிகர்கள் அவர்களது மத்தியில் விளையாடுவது ஒரு தனி அனுபவம் தான்.

இதையும் படிங்க : அவர் அடிச்ச டபுள் செஞ்சுரிக்கு அப்புறம் எனக்கு சேன்ஸ் கிடைக்கும்ன்ற நம்பிக்கையே போயிடுச்சி – தவான் வெளிப்படை

ஆர்சிபி அணியின் ரசிகர்கள் இத்தனை ஆண்டும் எங்களை ஆதரித்து தொடர்ச்சியாக எங்கள் மீதும் அன்பு வைத்து வருவதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த முறை நான் டக் அவுட்டில் அமர்ந்து ஆர்.சி.பி அணிக்காக எனது ஆதரவையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்த காத்திருக்கிறேன் என ஏ பி டி வில்லியர்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement