- Advertisement -
ஆசிய கோப்பை

ஆசிய கோப்பை தொடரின் எல்லா போட்டிகளிலும் பும்ரா விளையாட மாட்டார்.. காரணத்தை கூறிய – ஏ.பி.டி

2025-ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் செப்டம்பர் 28-ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியானது இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ-யின் மூலம் கடந்து சில தினங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் முதன்மை வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ராவும் இடம் பிடித்திருந்தார்.

எல்லா மேட்ச்லயும் பும்ரா ஆட மாட்டார் : ஏ.பி.டி கருத்து

ஏற்கனவே இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடரின் 5 போட்டிகளில் பணிச்சுமையை காரணம் காட்டி 3 போட்டியில் மட்டுமே விளையாடிய ஜஸ்ப்ரீத் பும்ரா எதிர்வரும் இந்த ஆசிய கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளிலும் பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

- Advertisement -

ஏனெனில் உலகின் முன்னணி நம்பர் 1 வேகப்பந்து வீச்சாளரான அவரை இந்திய அணி பாதுகாப்பாகவே பயன்படுத்தும் என்று கூறப்படுகிறது. இதனால் இந்த ஆசிய கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளிலும் பும்ரா விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரான ஏ.பி.டி வில்லியர்ஸ் கூறுகையில் :

ஆசிய கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளிலும் பும்ரா விளையாட மாட்டார் என்றும் முக்கிய போட்டிகளில் மட்டுமே அவர் பங்கேற்க வாய்ப்பிருப்பதாக தனது கருத்தினை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : பும்ரா போன்ற ஒரு வீரர் மீண்டும் டி20 அணிக்கு திரும்பியதை பார்ப்பது அற்புதமாக இருக்கிறது. இருந்தாலும் அவர் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார் என்று நான் நினைக்கவில்லை.

- Advertisement -

ஏனெனில் ஏற்கனவே இந்திய அணி நிர்வாகம் வெளியிட்டிருந்த அறிவிப்பில் அவரை பாதுகாப்பாக பயன்படுத்துவோம் என்று குறிப்பிட்டுள்ளனர். இதன் காரணமாக நிச்சயம் அவர் பெரிய அணிகளுக்கு எதிரான போட்டியின் போது தான் களமிறக்கும் என்று தெரிகிறது. தற்போதைய காலகட்டத்தில் ஒவ்வொரு அணியுமே அதிகபட்ச போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது.

இதையும் படிங்க : இந்திய அணியின் நவீன தடுப்புசுவர் புஜாரா ஓய்வு.. ஆஸியின் நாயகன் பிரியா மனதுடன் உருக்கமான அறிவிப்பு

30 வயதிற்கு மேலான ஒரு வீரர் தொடர்ச்சியாக விளையாடுவது அவர்களுக்கு பணிச்சுமையையும், காயத்தையும் ஏற்படுத்தலாம். எனவே அவற்றை கருத்தில் கொண்டு பும்ரா தேவையான முக்கியமான போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று தான் நினைப்பதாக ஏ.பி டி வில்லியர்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -