எப்போதும் பார்க்காத ஆர்.சி.பி அணியை இம்முறை பாக்க போறீங்க – கெத்து காட்டிய சீனியர் வீரர்

Abrcb

இந்தியாவில் 12 வருடங்கள் ஐபிஎல் தொடர் நடைபெற்று வந்தாலும் பல்வேறு திறமைகள் கண்டறியப்பட்டாலும் ஒரு சில அணிகளில் பெரும் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்று முறையும் மும்பை இந்தியன்ஸ் அணி நான்கு முறையும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இரண்டு முறையும் கோப்பையை வென்றுள்ளது .

rcb 2

மற்ற ஒரு சில அணிகள் ஒரு முறை கோப்பையை வென்றிருந்தாலும் டெல்லி கேப்பிடல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு போன்ற ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை இதில் ஒரு சில அணிகள் ஒருமுறைகூட பிளே ஆப் சுற்றுக்கு அல்லது இறுதிப்போட்டிக்கு சென்றதில்லை.

அப்படி ஒரு அணி தான் விராட் கோலி தலைமை வகிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை ஒரு கோப்பையை வென்றதில்லை. ஆனால் வருடா வருடம் இந்த அணி தங்களது வீரர்களை கட்டமைப்பை மாற்றிக்கொண்டே இருக்கும் இந்த முறையும் அப்படித்தான் துவக்க வீரர் களையும், பந்துவீச்சாளர்களை மாற்றியிருக்கிறது.

Steyn-1

இதன் காரணமாக இந்த முறை நாங்கள் வெற்றி பெற்று விடுவோம் என்று அந்த அணியின் வீரர்கள் மார் தட்டிக் கொண்டிருக்கிறார்கள். அப்படித்தான் ஏபி டிவிலியர்ஸ் பேசியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில்… ஒவ்வொரு ஆண்டும் எங்களது அணியே மிகச் சிறப்பாக இருக்கிறது என்றுதான் கூறிக் கொண்டிருக்கிறோம்.

- Advertisement -

ஆனால் இந்த முறை உண்மையாகவே சொல்கிறேன். சூப்பராக தான் இருக்கிறது. இப்போதைக்கு என்னால் இதைத் தான் சொல்ல முடியும் எங்களது செயல்பாட்டில் பாருங்கள் இந்த முறை நாங்கள் பெரிய அளவில் சாதிப்போம் என்று தெரிவித்திருக்கிறார் ஏபி டிவில்லியர்ஸ்.