ஓய்வு வேண்டாம். நான் மீண்டும் வருகிறேன். தென்னாபிரிக்க அணிக்கு திரும்பும் மிஸ்டர் 360 – விவரம் இதோ

ABD-1
- Advertisement -

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியில் சிறந்த வீரராக திகழ்ந்தவர் ஏபி டிவிலியர்ஸ் இவர் இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடருடன் சர்வதேச போட்டியில் இருந்து திடீரென ஓய்வு முடிவை அறிவித்தார். அதன் பின் தற்போது டி20 உலகக் கோப்பை நெருங்கி வரும் நிலையில் மீண்டும் தான் அணிக்கு திரும்ப தயார் என்று தெரிவித்து இருந்தார்.

abd1

- Advertisement -

ஆனால் அணி நிர்வாகம் அவரது கோரிக்கையை நிராகரித்தது ஏனெனில் தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் உலக கோப்பைக்காக தயார் நிலையில் இருப்பதால் அவர்களை கழட்டி விட்டு மீண்டும் உங்களை சேர்ப்பது கஷ்டம் என்று கூறியிருந்தனர். இந்நிலையில் தென்னாபிரிக்க அணியின் தொடர் தோல்வியினாலும் மேலும் முன்னணி வீரர்கள் ஓய்வு பெற்ற நிலையில் தென் ஆப்பிரிக்க தள்ளாட ஆரம்பித்தது.

இந்நிலையில் தற்போது அந்த அணியில் நிலைமையை சரிசெய்ய இயக்குனர் ஸ்மித் மற்றும் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் ஆகியோர் நியமிக்கப் பட்டார்கள். ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் t20 உலகக்கோப்பைக்கு சிறந்த அணியை தெரியப்படுத்த தென்னாப்பிரிக்கா விரும்புகிறது. எனவே தான் மீண்டும் டி20 அணிக்கு திரும்ப தயார் என்று கூறிய டிவில்லியர்ஸை தற்போது அவர்கள் ஆதரவளித்து அணிக்குள் கொண்டு வர இருக்கின்றனர்.

இதுகுறித்து மார்க் பவுச்சர் கூறுகையில் : மீடியா மற்றும் பொது இடங்களில் குறித்து பேசுகிறார் ஆனால் எப்போதும் என்னிடம் அது பற்றி பேசியது கிடையாது. இருப்பினும் அவருடனான பேச்சுவார்த்தை உறுதி செய்துவிட்டு அவர் வருவாரா என்பதை நாங்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவிப்போம். உலக கோப்பைக்கு சிறந்த அணியை அனுப்ப நாங்கள் முயற்சித்து வருகிறோம்.

ABD

நான் பதவியேற்ற நாள் முதலே சிறந்த அணியை உருவாக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறேன் மேலும் டிவில்லியர்ஸ் வருவது குறித்து எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை அவர் உலக கோப்பை வெல்ல உதவியாக இருப்பார் என்றால் அவர் நிச்சயம் வருவார் என்றும் பவுச்சர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement