இதுமட்டும் சரியா இருந்தால் தெ.ஆ அணிக்காக விளையாடுவது மட்டுமின்றி கேப்டனாகவும் தயார் – டிவில்லியர்ஸ் அதிரடி

ABD
- Advertisement -

இன்றைய காலகட்டத்தில் ஒரு தலை சிறந்த பேட்ஸ்மேனாக இருப்பவர் ஏபி டிவில்லியர்ஸ் தென்னாப்பிரிக்க அணியை சேர்ந்த இவர் இந்தியாவில் மட்டும் பிறந்திருந்தால் விராட் கோலி , ரோகித் சர்மா ஆகிய பலரையும் பின்தள்ளி இருப்பார். அந்த அளவிற்கு திறமையான வீரர். கடந்த 2015 ஆம் ஆண்டு கேப்டனாக இருந்தபோது அந்த அணி செமி பைனல் போட்டியில் உலகக் கோப்பை தொடரில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

abd1

- Advertisement -

அதன் பின்னர் தென் ஆப்பிரிக்க அணி சற்று சறுக்கல்களை சந்தித்து. இதன் காரணமாக கடந்த 3 வருடத்திற்கு முன்னர் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் ராஜினாமா செய்துவிட்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார். அதன் பின்னர் தற்போது வரை தென் ஆப்பிரிக்க அணி இவரது இழப்பில் இருந்து மீள முடியாமல் இருந்து வருகிறது.

அதனை தொடர்ந்து சென்ற வருடம் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்க அணி கடுமையான தோல்வியைச் சந்தித்தது.இதனை பார்த்த ஏபி டிவிலியர்ஸ் மீண்டும் தென் ஆப்பிரிக்க அணிக்கு ஆட விரும்புவதாக தெரிவித்தார். அதேபோல நடைபெறும் டி20 உலக கோப்பை தொடரில் ஆட விருப்பம் இருக்கிறது என்று தெரிவித்தார்.

இந்த விருப்பத்தை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் நிராகரித்த நிலையில், மீண்டும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்த அவர் ஆடுவாரா என்று கேட்டுள்ளது. தென்னாபிரிக்க அணியின் இயக்குனராக இருக்கும் ஸ்மித் தற்போது டிவில்லியர்ஸ் விளையாட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். மேலும் பயிற்சியாளராக பவுச்சரும் இதற்கு ஆதரவு தெரிவித்ததால் விரைவில் அணியில் அவர் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ABD-1

இதற்கு பதிலளித்த டிவிலியர்ஸ்.. நான் தென் ஆப்பிரிக்க அணிக்கு ஆட விருப்பமாகவே இருக்கிறேன். ஆனால், எனது பேட்டிங் பார்மை பொருத்துதான் எல்லாம் அமையும். கேப்டனாக நியமித்தாலும் அதனை ஏற்று வழி நடத்த தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் ஏபி டிவிலியர்ஸ். மேலும் அடுத்த ஆண்டு எனது உடல் ஆட்டத்திற்கு ஒழுழைத்தால் மட்டுமே விளையாட முடியும் என்று அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement