ஏ.பி டிவில்லியர்ஸ் தேர்வு செய்த ஆல்டைம் பெஸ்ட் ஐ.பி.எல் அணி இதோ. கேப்டன் கோலி கிடையாது – அணி வீரர்களின் லிஸ்ட் இதோ

ABD
- Advertisement -

12 வருட ஐபிஎல் அணிகளை வைத்து மிகச்சிறந்த ஐபிஎல் அணியை தேர்வு செய்து வெளியிட்டுள்ளார் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ஏபி டிவில்லியர்ஸ். இந்த வருடம் ஐபிஎல் தொடர் நடத்தவில்லை. தற்போது நடக்குமா என்றும் தெரியவில்லை. இந்நிலையில் பல்வேறு முன்னணி வீரர்களும் தங்களது கருத்துக்களை சமூகவலைத்தளம் மூலமாக வெளியிட்டு வருகின்றனர்.

ABD-1

இதனால் வீரர்கள் இதுபோன்று தங்களுக்கு பிடித்த வீரர்களை வைத்து அணிகளைத் தேர்வு செய்து வெளியிட்டு வருகின்றனர். ஏபி டிவிலியர்ஸ் தேர்வு செய்த அணியில் துவக்க வீரராக இந்தியாவின் விரேந்தர் சேவாக் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோகித் சர்மா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

- Advertisement -

மூன்றாவது வீரராக தனது கேப்டன் விராட் கோலியை தேர்வு செய்துள்ளார் ஏபி டிவிலியர்ஸ். நான்காவது இடத்திற்கு தன்னை தானே தேர்வு செய்து கொண்டார். ஐந்தாவது இடத்திற்கு அதிரடி ஆல்ரவுண்டர் ஆன பென் ஸ்டோக்சை தேர்வு செய்துள்ளார். பென் ஸ்டோக்ஸ் கடந்த ஐந்து வருடங்களாகத்தான் ஐபிஎல் தொடரில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

கேப்டனாக மகேந்திர சிங் தோனியை தேர்வுசெய்துள்ளார் ஏபி டிவில்லியர்ஸ். விக்கெட் கீப்பர் பணியையும் இவரே செய்வார். தனது கேப்டன் விராட் கோலி ஒரு கோப்பையை கூட வெல்லாததால் ஏமாற்றமடைந்து விட்டார் போலிருக்கிறது.

- Advertisement -

மற்றொரு ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவையும், பந்துவீச்சாளராக ரஷீத் கானையும் தேர்வு செய்துள்ளார். வேகப்பந்து வீச்சாளராக மூன்று பேரை தேர்வு செய்துள்ளார் ஏபி டிவில்லியர்ஸ். புவனேஸ்வர் குமார் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜஸ்பிரித் பும்ரா,காகிசோ ரபாடா ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.

Bumrah-1

டிவில்லியர்ஸ் தேர்வு செய்த பெஸ்ட் ஐ.பி.எல் அணி இதோ :

விரேந்திர சேவாக், ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி, ஏ.பி டிவில்லியர்ஸ், பென் ஸ்டோக்ஸ், தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரசீத் கான், புவனேஷ்வர் குமார், காகிசோ ரபாடா, ஜஸ்ப்ரிட் பும்ரா.

Advertisement