பெங்களூரு அணிக்கு நல்ல திறமைசாலி கிடைத்துள்ளார். இளம்வீரரை புகழ்ந்து தள்ளிய – ஏ.பி.டி

ABD
- Advertisement -

ஐபிஎல் தொடரின் மூன்றாவது போட்டி நேற்று பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வார்னர் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி விளையாடிய பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 163 ரன்களை குவித்தது அதிகபட்சமாக அறிமுக வீரர் படிக்கல் 56 ரன்களும் டிவில்லியர்ஸ் 51 ரன்களும் அடித்தனர்.

padikkal

- Advertisement -

அதன் பின்னர் 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி மணிஷ் பாண்டே பேர்ஸ்டோ ஆகியோர் விளையாடிய விதத்தை பார்க்கும் போது எளிதில் வெற்றி பெறும் என்று நினைத்தனர். ஆனால் இறுதியில் 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் விழுந்து 153 ரன்கள் மட்டுமே குவித்தது. அதிகபட்சமாக பேர்ஸ்டோ 61 ரன்கள் குவித்தார். இதனால் பெங்களூரு அணி 10 ரன் வித்தியாசத்தில் இந்த தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

ஆட்டநாயகனாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றி பெங்களூரு அணியின் சுழற்பந்து வீச்சாளர் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து பரிசளிப்பு விழாவின் போது பேசிய ஏபி டிவில்லியர்ஸ் கூறியதாவது : கடின உழைப்பிற்குப் பிறகு கிடைத்த இந்த வெற்றி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த போட்டியில் நாங்கள் சரியான மாற்றங்களை கொண்டு அணியை தேர்வு செய்துள்ளோம்.

Padikkal 2

36 வயதில் நான் விளையாடுவது என்பது ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தும். ஆனால் சரியான பயிற்சியும் முறைப்படியான கடின உழைப்பும் இருந்தால் நிச்சயம் சிறப்பாக விளையாடலாம். அந்த வகையில் நான் விளையாடியதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். எங்கள் அணியில் சரியான அளவு இளம் வீரர்கள் இருக்கின்றன.ர் சர்வதேச வீரர்களுடன் இணைந்து இளம் வீரர்கள் விளையாடும் பொழுது அதை பார்ப்பதற்கு மிக அருமையாக உள்ளது.

Padikkal 1

மேலும் இந்த போட்டியில் விளையாடிய துவக்க வீரர் படிக்கல் மிகவும் திறமைசாலி. பெங்களூரு அணிக்கு புதிதாகக் கிடைத்திருக்கும் ஒரு நல்ல இளம்வீரர் மேலும் அவர் பார்ப்பதற்கும் மற்றவர்களுடன் பழகுவதற்கும் சிறிது வெட்கப்படுகிறார் மேலும் அமைதியாகவே இருக்கிறார் என்றும் படிக்கல் குறித்து ஏபி டிவிலியர்ஸ் புகழ்ந்து பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement