ஐ.பி.எல் தொடரில் இந்த டீம்தான் வெயிட். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை – ஏ.பி.டி ஓபன் டாக்

ABD
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற பதிமூன்றாவது ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இது அந்த அணிக்கு ஐந்தாவது கோப்பை ஆகும். இதுவரை எந்த ஒரு அணியும் 5 முறை கோப்பையை வென்றதில்லை. எந்த வருடமும் இல்லாத வகையில் மும்பை அணி
இந்த முறை மிகவும் சாதுர்யமாகவும், எளிதாகவும் கோப்பையை வென்றது.

mi

- Advertisement -

இந்த அணியை எதிர்க்க இந்த இடத்தில் என்ற ஒரு அணிக்கும் துணியவில்லை என்பதுதான். உண்மை சொல்லப் போனால் எந்த ஒரு அணியும் பக்கத்தில் கூட வர முடியவில்லை கடந்த 5 வருடங்களாக ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருனால் பாண்டியா , சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் போன்ற வீரர்களுக்கு திறமையை ஊட்டி வளர்த்த அணி தற்போது அதன் பலன்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறது.

இந்த வீரர்கள் தான் இந்த வருட ஐபிஎல் தொடரில் அந்த அணியின் வெற்றிக்காக கடுமையாக உழைத்து அதை செய்தும் காட்டினார். இந்நிலையில் இந்த வருட ஐபிஎல் தொடரில் விளையாடிய சிறந்த அணி மும்பை இந்தியன்ஸ் அணி தான் என்று பேசியுள்ளார் பெங்களூரு அணியின் வீரர் ஏபி டிவில்லியர்ஸ்.

Ishan kishan

இதுகுறித்து அவர் கூறுகையில்… ஐந்தாவது முறை கோப்பையை வென்ற மும்பை அணிக்கு வாழ்த்துக்கள். இந்த ஆண்டின் மிகச் சிறந்த அணி மும்பை அணி தான் இதில் எந்த வித சந்தேகமும் தேவையில்லை. அந்த அணியை எதிர்க்க எந்த ஒரு அணியும் துணியவில்லை. இதுதான் உண்மை. அந்த அணிக்கு எனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்து இருந்தார் ஏபி டிவில்லியர்ஸ்.

Pollard

இதனைத்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் ஷேன் வாட்சனும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பலரும் மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த வெற்றியை பாராட்டி வருகின்றனர்.

Advertisement