
தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரான ஏ.பி.டி வில்லியர்ஸ் கடந்த 2008-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி 2021-ஆம் ஆண்டு வரை 14 ஆண்டுகள் தொடர்ச்சியாக விளையாடி 184 போட்டிகளில் பங்கேற்று 3 சதம் மற்றும் 40 அரைசதங்கள் என 5162 ரன்கள் குவித்துள்ளார். ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக அறிமுகமான அவர் அதன்பிறகு 2011 ஆம் ஆண்டில் இருந்து 2021-ஆம் ஆண்டு வரை 11 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆர்.சி.பி அணியுடன் பயணித்தார்.
ஆர்.சி.பி அணியில் விராட் கோலிக்கு அடுத்து மிகப்பெரிய ஜாம்பவான் வீரராக பார்க்கப்படும் அவர் ஐபிஎல் கோப்பையை வெல்லாமல் வெளியேறியது மிகப்பெரிய வருத்தம் என்றும் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரை ஆர்.சி.பி அணி கைப்பற்றியதால் முழு மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை விளையாடியுள்ள வீரர்களை வைத்து ஆல்டைம் பெஸ்ட் ஐபிஎல் பிளேயிங் லெவனையும் அவர் தேர்வு செய்து அறிவித்துள்ளார்.
அந்த வகையில் ஏ.பி.டிவில்லியர்ஸ் தேர்வு செய்துள்ள அந்த 11 வீரர்கள் யார்? என்பது குறித்த பட்டியலையும் அவர் தெளிவாக வெளியிட்டுள்ளார். அப்படி அவர் தேர்வு செய்த சிறந்த ஐபிஎல் பிளேயிங் லெவனில் துவக்க வீரர்களாக : மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சி.எஸ்.கே அணியின் முன்னாள் துவக்க வீரரான மேத்யூ ஹைடன் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். அவர்களுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் ஆர்.சி.பி அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலியை தேர்வு செய்துள்ளார்.
நான்காவது இடத்தில் சூரியகுமார் யாதவை தேர்வு செய்துள்ளார். ஐந்தாவது இடத்தில் ஏ.பி.டி தன்னை தானே தேர்வு செய்துள்ளார். ஆறாவது இடத்தில் ஆல்ரவுண்டராக மும்பை அணியின் தற்போதைய கேப்டன் ஹார்திக் பாண்டியாவை தேர்வு செய்துள்ளார். இந்த பட்டியலில் ஏழாவது இடத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக சி.எஸ்.கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியை தேர்வு செய்து அவருக்கு கேப்டன் பதவியையும் வழங்கியுள்ளார்.
அதுதவிர்த்து நான்கு பந்துவீச்சாளர்களில் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களாக ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் லாசித் மலிங்கா ஆகியோரை தேர்வு செய்துள்ளார். அவர்களை தவிர்த்து இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களாக யுஸ்வேந்திர சாஹல் மற்றும் டேனியல் வெட்டோரி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார். இதுதான் தன்னுடைய சிறந்த ஆல்டைம் ஐபிஎல் அணி என்றும் அவர் அறிவித்துள்ளார். அப்படி ஏ.பி.டிவில்லியர்ஸ் தேர்வு செய்த ஆல்டைம் ஐபிஎல் பெஸ்ட் பிளேயிங் லெவன் இதோ :
இதையும் படிங்க : நாங்க ஃபோர்ஸ் பண்ண மாட்டோம்.. ஆனாலும் யங் பிளேயர்ஸ் அவசியம்.. ரோஹித், கோலி குறித்து – பி.சி.சி.ஐ முடிவு
1) ரோஹித் சர்மா, 2) மேத்யூ ஹைடன், 3) விராட் கோலி, 4) சூரியகுமார் யாதவ், 5) ஏ.பி டிவில்லியர்ஸ், 6) ஹார்டிக் பாண்டியா, 7) எம்.எஸ் தோனி (கேப்டன்), 8) ஜஸ்ப்ரீத் பும்ரா, 9) லாசித் மலிங்கா, 10) யுஸ்வேந்திர சாஹல், 11) டேனியல் வெட்டோரி.