ஐ.பி.எல் வரலாற்றின் மிகச்சிறந்த பெஸ்ட் பிளேயிங் லெவன் இதுதான் – ஏ.பி.டி தேர்வு செய்த 11 வீரர்கள் லிஸ்ட் இதோ

ABD
- Advertisement -

கடந்த பல ஆண்டுகளாகவே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக முக்கிய வீரராக விளையாடி வரும் ஏபி டிவில்லியர்ஸ், தன் மனதிற்கு பிடித்த சிறந்த ஐபிஎல் Xi வீரர்கள் பட்டியலை அண்மையில் கூறியுள்ளார். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விரேந்திர சேவாக் மற்றும் ரோகித் சர்மாவை ஏபி டிவில்லியர்ஸ் தேர்ந்தெடுத்துள்ளார். மூன்றாமிடத்தில் தனது சக வீரரும் நண்பருமான விராட் கோலியை ஏபி டிவில்லியர்ஸ் தேர்ந்தெடுத்துள்ளார்.

Rohith

- Advertisement -

நான்காம் இடத்தில் யாரை அழைப்பது என்று எழுந்த கேள்விக்கு, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் அல்லது தன்னை (ஏபி டிவில்லியர்ஸ்) ஆட வைக்கலாம். இந்த மூவரில் இருந்து யாரேனும் ஒருவரை நான்காமிடத்தில் ஆட வைத்தார் மிகச் சரியாக இருக்கும் என்று ஏபி டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.
அதன் பின்னர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக மற்றும் அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனியை ஏபி டிவில்லியர்ஸ் தேர்ந்தெடுத்துள்ளார்.

ஆல்ரவுண்டர் வீரர்களை பொறுத்தவரையில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ரவீந்திர ஜடேஜாவை தேர்ந்தெடுத்துள்ள ஏபிடி, பௌலர்களைப் பொறுத்தவரையில் ஜஸ்பிரித் பும்ரா புவனேஸ்வர் குமார் ககிசோ ரபடா மற்றும் ரஷித் கானை தேர்ந்தெடுத்துள்ளார். ஏபி டிவில்லியர்ஸ் தேர்ந்தெடுத்துள்ள இந்த 11 வீரர்களுக்கான பட்டியல் குறித்து கிரிக்கெட் ரசிகர்களும், வல்லுனர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ABD

ஏபி டிவில்லியர்ஸ் மிகச்சிறந்த 11 வீரர்களை தேர்ந்தெடுத்துள்ளார் என்ற ஒரு பக்கமும், மறுபக்கம் சுரேஷ் ரெய்னா, லசித் மலிங்கா, டேவிட் வார்னர், கிறிஸ் கெயில் போன்ற சில வீரர்களை ஏபி டிவில்லியர்ஸ் தேர்ந்தெடுக்க தவறியுள்ளதாக சில கிரிக்கெட் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ABD

ஏ பி டிவிலியர்ஸ்’சின் ஐபிஎல் XI : விரேந்தர் சேவாக், ரோஹித் ஷர்மா, விராட் கோலி, கேன் வில்லியம்சன் / ஸ்டீவன் ஸ்மித் / ஏபி டிவிலியர்ஸ், பென் ஸ்டோக்ஸ், மகேந்திரசிங் தோனி (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, ரஷித் கான், புவனேஷ்வர் குமார், காகிசோ ரபாடா, ஜஸ்பரீத் பும்ரா.

Advertisement