தெ.ஆ அணிக்காக மீண்டும் விளையாடும் முடிவு குறித்து வாய்திறந்த டிவில்லியர்ஸ் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ABD

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வரலாற்றில் தவிர்க்க முடியாத பெயர் என்றால் அதில் டிவிலியர்ஸ் பெயரும் என்றுமே அடங்கும். அந்த அளவுக்கு அதிரடியாக ஆடி தனக்கென தனி முத்திரையைப் பதித்த வீரர் ஆவார். ஏபி டிவில்லியர்ஸ் எந்தவித கிரிக்கெட் ஃபார்மேட் என்றாலும் அதில் தனது அதிரடி காட்டி எதிரணியை கதிகலங்க வைப்பார். நல்ல உடல் தகுதியுடன் இருக்கும் அவர் இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகள் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெகு சீக்கிரமாக தனது ஆய்வறிக்கையை அறிவித்துவிட்டார். இது தென் ஆப்பிரிக்கா ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

abd1

தற்பொழுது மீண்டும் தென்னாபிரிக்க அணிக்காக களம் இறங்க உள்ளதாக ஏபி டிவில்லியர்ஸ் அறிவித்ததை அடுத்து மீண்டும் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர். இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் பவுச்சருடன் நான் பேசியுள்ளேன். என்னிடம் அவர் மீண்டும் விளையாட விருப்பமா ? என்று முன்பே கேட்டிருந்தார். அதற்கு தற்போது நான் விளையாட விருப்பமாக உள்ளேன் என்று கூறியிருக்கிறேன்.

- Advertisement -

தென்ஆப்பிரிக்க அணியில் நான் விளையாடுவதற்கு இடம் இருந்தால் அதனால் யாரும் பாதிப்படையாமல் இருந்தால், அதேபோல் மீண்டும் அணியில் இணைந்து விளையாடும் அளவுக்கு எனக்கு உடல் தகுதி இருக்கும் பட்சத்தில் நான் தென் ஆப்பிரிக்க அணிக்கு மீண்டும் களம் இறங்கி விளையாட உள்ளேன் என்று டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.

Abd

டிவில்லியர்ஸ் கூறியதை எல்லாம் வைத்துப் பார்த்தால் அவர் கண்டிப்பாக இந்த ஆண்டு நடக்க இருக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் டி20 தொடரில் விளையாடுவார் என்று பெரிதாக எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

abd

இந்திய மைதானங்களில் மிக அதிரடியாக ஆடக்கூடிய டிவில்லியர்ஸ் ஒருவேளை இந்த ஆண்டு இந்தியாவில் நடக்க இருக்கும் உலக கோப்பை டி20 தொடரில் விளையாடினால், நிச்சயமாக தென்னாபிரிக்க அணிக்கு மிகப்பெரிய பலமாக அமையும். ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில் டிவில்லியர்ஸ் இன் பேட்டிங் அவரேஜ் 40 என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவரது ஸ்ட்ரைக் ரேட் 152.62 ஆகும். நிச்சயமாக இது தென்னாபிரிக்க ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.

Advertisement