முரட்டு தனமாக சிக்ஸர் அடித்து மிரட்டலான ஆட்டத்தை காண்பித்த ஏ.பி.டி – வைரலாகும் இமாலய சிக்ஸர் வீடியோ

ABD
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் தற்போது பிக்பேஷ் லீக் டி20 போட்டிகள் நடந்து வருகின்றன. அதில் தென்ஆப்பிரிக்க அணியின் வீரரான ஏபி டிவிலியர்ஸ் பார்ம் இன்றி தவித்து வந்த நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் மீண்டும் தனது பழைய ஆட்டத்திற்கு திரும்பிய ஏபி டி வில்லியர்ஸ் 37 பந்துகளில் 71 ரன்கள் குவித்து அசத்தினார்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக பிரிஸ்பேன் ஹீட் அணி வீரர் உசேன் வீசிய ஒரு பந்தில் அவர் அடித்த சிக்ஸர் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. ஆஸ்திரேலியாவில் பொதுவாகவே மைதானங்கள் மிகப்பெரியது அந்த மைதானத்தில் எளிமையாக சிக்ஸர் அடிப்பது சாதாரண விடயம் கிடையாது. ஆனால் அந்த மைதானத்தில் மிகப்பெரிய சிக்சர் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார் ஏபி டிவிலியர்ஸ். இதன்மூலம் ஐபிஎல் தொடரிலும் அவர் பெங்களூர் அணிக்காக இவ்வாறு ஆடுவார் என்பதை வெளிக்காட்டி உள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற ஏபி டிவில்லியர்ஸ் கிரிக்கெட் விளையாடாமல் இருந்ததால் அவர் பார்ம் இன்றி தவித்து வந்ததாக பலரும் இணையத்தில் பதிவிட்டு வந்தனர் இருப்பினும் மீண்டும் தற்போது விளையாடி வரும் ஏபி டிவிலியர்ஸ் நேற்றைய ஆட்டம் அவரது அதிரடியை மீண்டும் காண்பிக்கும் விதமாக இருந்தது. இதனால் ஆர்சிபி ரசிகர்களும் தற்போது உற்சாகத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement