கொரோனா வந்து எல்லாம் மாறிடிச்சி. ஆனா ஏ.பி.டி இன்னும் மாறல – என்ன பண்ணியிருக்காரு பாருங்க

Abd-2
- Advertisement -

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர். அதற்கு முடிவு கட்டும் விதமாக இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

abd1

அதனை தொடர்ந்து தற்போது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகமும் “3tc” என அழைக்கப்படும் வித்தியாசமான கிரிக்கெட் தொடரை தற்போது அறிமுகம் செய்து நடத்தி வருகிறது. இந்த தொடரில் மூன்று அணிகள் ஒரே நேரத்தில் மோதும்படி புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் முதல் அணி பேட்டிங் செய்யும் அப்போது இரண்டாம் அணி பந்து வீசும்.

- Advertisement -

அடுத்து மூன்றாம் அணி பேட்டிங் செய்யும் முதல் அணி பந்து வீசும் அதற்கு அடுத்து இரண்டாம் அணி பேட்டிங் செய்யும் மூன்றாம் அணி பந்து வீசும் என்று மாற்றி மாற்றி செய்ய வேண்டும். இரண்டு பகுதிகளாக ஆட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. முடிவில் எந்த அணி அதிக ரன்கள் எடுத்து இருக்கிறதோ அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

Abd

இந்த வித்தியாசமான போட்டியில் 8 வீரர்கள் மட்டுமே ஒரு அணியில் பங்கேற்பார்கள். மேலும் 6 ஓவர் கொண்டு இந்த போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் தென்னாபிரிக்க அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஏபி டிவில்லியர்ஸ் ஈகிள்ஸ் அணிக்காக விளையாடினார். அந்த போட்டியில் ஆடிய ஈகிள்ஸ் அணி 6 ஓவர்கள் முடிவில் 66 ரன்கள் எடுத்தது. முதல் முறை ஏ.பி.டி 11 ரன்கள் மட்டும் எடுத்து களத்தில் இருந்தார்.

Abd 1

ஆனால் அதற்கடுத்து இரண்டாவது பகுதியில் விளையாடும்போது டிவிலியர்ஸ் 24 பந்துகளில் 61 ரன்கள் குவித்து அசத்தினார். அவரின் இந்த அதிரடி ரசிகர்களை வியக்க வைத்தது மேலும் நான்கு மாதங்கள் ஆகியும் இவரது அதிரடி மாறவில்லை என்று ரசிகர்கள் அவரது இந்த நிகழ்வை இணையத்தில் வைரலாகி வருகின்றனர். மூன்று அணிகள் விளையாடிய போட்டியில் ஏபி டிவில்லியர்ஸ் அணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement