200 ஆவது ஐ.பி.எல் போட்டியில் விளையாடிய விராட் கோலிக்கு – நினைவு பரிசை வழங்கிய ஏ.பி.டி

kohli-4
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 31-ஆவது லீக் போட்டியில் நேற்று அபுதாபி மைதானத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி ஐபிஎல் வரலாற்றில் ஒரு முக்கிய சாதனை ஒன்றை நிகழ்த்தியிருந்தார். ஐ.பி.எல் தொடரில் அறிமுகமானத்திலிருந்து இதுவரை பெங்களூரு அணிக்காக மட்டுமே விளையாடி வரும் கோலி நேற்று 200-வது போட்டியில் விளையாடினார்.

Kohli

- Advertisement -

ஐபிஎல் வரலாற்றில் ஒரே அணிக்காக 200 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி இதன்மூலம் படைத்துள்ளார். இந்த ஸ்பெஷலான போட்டியில் களமிறங்கிய விராட் கோலி பேட்டிங்கில் பெரிய அளவில் ஜொலிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் 4 பந்துகளை மட்டுமே சந்தித்து 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இந்த போட்டியில் பெங்களூரு அணி படு மோசமான தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இந்த தோல்வியை மறந்து அடுத்த போட்டிக்கு தயாராகும் படி வீரர்களுக்கு சில நினைவு பரிசுகளை வழங்கிய ஆர்.சி.பி. அணியின் நிர்வாகம் வீரர்களுக்கு ஊக்கம் அளித்தது.

அப்போது ஆர்.சி.பி அணியின் மற்றொரு முன்னணி வீரரான ஏ.பி.டிவில்லியர்ஸ் விராட் கோலியின் இந்த வரலாற்று சாதனையை பாராட்டி அவருக்கு விராட் என்று பெயரிடப்பட்ட 200 நம்பர் பொறிக்கப்பட்ட ஒரு ஸ்பெஷல் ஜெர்சி ஒன்றினை நினைவு பரிசாக வழங்கினார். இந்த வீடியோவை தற்போது பெங்களூரில் அணி நிர்வாகத்தின் ட்விட்டர் பக்கத்தில் வெளியாக தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement