விராட் கோலி மற்றும் ஸ்மித்துக்கும் உள்ள வித்தியாசத்தை புட்டு புட்டு வைத்த டிவில்லியர்ஸ் – விவரம் இதோ

ABD
- Advertisement -

தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுவிட்டார். சமீபத்தில் மீண்டும் தான் தென்னாபிரிக்க அணிக்கு திரும்புவதற்கு தயார் என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸால் கிடைத்த இந்த ஓய்வு நேரத்தில் ஐவரும் சமூக வலைத்தளத்தில் நேரலையில் உரையாடி வருகிறார்.

abd1

- Advertisement -

அப்போது கோலி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்று கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ஏபி டிவில்லியர்ஸ், விராட்கோலி சுவிட்சர்லாந்து டென்னிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரரை போல தனித்தன்மை வாய்ந்தவர். ஆனால் ஸ்டீவன் ஸ்மித் ரஃபேல் நடாலை போன்றவர் என்று தெரிவித்துள்ளார். மேலும் விராட் கோலி பந்தை எளிதாக அளிப்பதில் வல்லவர். அந்த திறமை அவருக்கு இயற்கையாகவே இருக்கிறது.

அதேநேரத்தில் ஸ்டீவன் ஸ்மித் எவ்வாறு ரன் சேகரிப்பது என்று தேடி கொண்டிருப்பார். அவர் எளிதாக பந்தை அடிக்கும் திறமை கொண்டவர் இல்லை என்று கூறினார். மேலும் சச்சின் மற்றும் விராட் கோலி ஆகிய இருவரில் யார் சிறந்த வீரர் என்று கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் எனக்கும் விராட் கோலிக்கும் சச்சின் தான் ரோல்மாடல் வீரர் சச்சின் டெண்டுல்கர் விளாசிய ரன்கள் மற்றும் சாதனைகள் அனைத்தும் தற்போது வரை யாராலும் தொட முடியாது.

விராட் கோலியும் அவ்வப்போது சச்சின் தான் தனது ரோல் மாடல் என்று கூறுவார். ஆனால் என்னை பொறுத்த வரையில் இருவரில் விராட் கோலியை தான் நான் தேர்வு செய்வேன் .எல்லா சூழ்நிலைகளையும் சூழ்நிலைகளிலும் சச்சின் தான் சிறந்த வீரர் என்றாலும் அதிக நெருக்கடியான நேரத்தில் ரன்களை துரத்தி பிடித்த விராட் கோலி வல்லவர் என்று கூறியுள்ளார் ஏபி டி வில்லியர்ஸ்.

ABD

இவரின் இந்த பேட்டி தற்போது வைரலாகி உள்ளது. மேலும் இவரது இந்த கருத்திற்கு இணையத்தில் கலவையான விமர்சனங்களும் குவிந்து வருகின்றன. பெங்களூரு அணிக்காக ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடும் டிவில்லியர்ஸ்க்கு அணியை தாண்டியும் தனிப்பட்ட முறையில் மிகவும் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இருவருக்கும் இடையே அழுத்தமான நட்பு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement