என்னை மன்னிச்சிடுங்க. நடக்காத ஒரு விஷயத்தை என்னால் சொல்ல முடியாது – ரசிகர்ளுக்கு அதிர்ச்சி அளித்த ஏ.பி.டி

ABD
- Advertisement -

தென்னாபிரிக்க அணியின் முன்னாள் கேப்டனும், அதிரடி வீரருமான ஏபி டிவிலியர்ஸ் பல ஆண்டுகளாக தென் ஆப்பிரிக்க அணிக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். சர்வதேச போட்டிகள் மட்டுமின்றி உலகில் நடைபெறும் டி20 லீக் போட்டிகளை பலவற்றிலும் தனது அதிரடியால் எதிரணி பந்துவீச்சாளர்கள் சிதறடிக்கும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிஸ்டர் 360 டிகிரி என்ற செல்லப் பெயரும் உண்டு. அந்த அளவிற்கு மைதானத்தில் அனைத்து திசைகளிலும் பந்துகளை சிதறிவிடும் ஒரு அதிரடி ஆட்டக்காரர் இருந்து வருகிறார்.

abd1

- Advertisement -

இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே 23-ம் தேதி அனைவரும் எதிர்பார்க்காத விதமாக டுவிட்டரில் தனது ஓய்வு அறிவிப்பை அறிவிக்கை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். அதனைத் தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் வெளிநாடுகளில் நடைபெறும் டி20 லீக் போட்டிகளில் அவர் தொடர்ச்சியாக தற்போது வரை விளையாடி வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் தென்னாபிரிக்க அணி படுதோல்வி அடைந்ததை அடுத்து மீண்டும் தென்னாப்பிரிக்கா அணிக்காக விளையாட உள்ளதாக தானே முன்வந்து வாய்ப்பினையும் தென்னாப்பிரிக்க நிர்வாகத்திடம் அவர் வாய்ப்பு தரும்படியும் கேட்டுக்கொண்டார் ஆரம்பத்தில் அவரது கோரிக்கையை நிராகரித்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகம் இந்த டி20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு அவரை அணியில் எடுக்க முடிவு செய்துள்ளது.

ABD-1

ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கிரிக்கெட் போட்டிகள் தடைபட்டுள்ளதால் மீண்டும் அவரது வருகை தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. டி20 உலக கோப்பை தொடரில் விளையாடி விட்டு அதன் பின்னர் முழு ஓய்வு எடுத்துக் கொள்ள விரும்புவதாக டிவில்லியர்ஸ் சமீபத்தில் அறிவித்தார். அதேபோன்று அந்த அணியின் பயிற்சியாளரான பவுச்சர் மற்றும் கிரிக்கெட் இயக்குனரான ஸ்மித் ஆகியோர் அவரின் இந்த முடிவினை வரவேற்றனர்.

- Advertisement -

இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்க ஆறு மாத காலம் இருக்கும் நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக இந்த தொடரும் ஒத்தி வைக்கப்பட பல வாய்ப்புகள் உள்ளன. இதனால் இந்த நிலைமை குறித்து தற்போது பேசிய டிவில்லியர்ஸ் கூறுகையில் : நான் தற்போது விளையாட தயாராக உள்ளேன். அதேநேரம் இந்த t20 உலகக் கோப்பை அடுத்த ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டால் அந்த சமயத்தில் நான் விளையாட ஆரோக்கியமாக இருப்பேனா என்ற விடயம் மிக முக்கியமானது.

ABD

ஏனெனில் தற்போது ஆரோக்கியமாக உள்ளேன் அதனால் விளையாட விரும்புகிறேன். ஆனால் அடுத்த வருடம் நிலைமை எப்படி இருக்கும் என்பது எனக்கு தெரியாது. இதனால் பொய்யான நம்பிக்கையை நான் தென்ஆப்பிரிக்கா நிர்வாகத்திடம் தெரிவிக்க விரும்பவில்லை. சூழ்நிலையே எனது வருகையை முடிவு செய்யும் என்று டிவில்லியர்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement