நாளைக்கே மோதிப்பாக்கலாமா ? விராட் கோலிக்கு சவால் விடுத்த ஏ.பி.டி – யாரை பாத்து இந்த கேள்வி கேட்டீங்க

ABD
- Advertisement -

14வது ஐபிஎல் தொடர் வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி துவங்க உள்ள நிலையில் இந்த தொடருக்கான ஏற்பாடுகள் தற்போது சூடு பிடித்துள்ளன. இந்த தொடரின் முதல் போட்டியில் ஆர்சிபி அணி மும்பை அணியை எதிர்த்து சென்னை மைதானத்தில் விளையாட உள்ளது. இதற்காக தற்போது வீரர்கள் தங்களது பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அனைத்து அணி வீரர்களும் தற்போது பயிற்சியில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

ipl trophy

- Advertisement -

கடந்த 13 ஆண்டுகளாக ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றாமல் இருக்கும் ஆர்சிபி அணி இம்முறையாவது தொடரை கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்ற ஆகவேண்டும் என்ற குறிக்கோளுடன் தீவிரமாக உள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் இணைந்து விளையாடி வரும் கோலி, டிவிலியர்ஸ் ஜோடி ஆர்சிபி அணிக்கு பெரிய பெரிய பலத்தை சேர்த்த போதிலும் அவர்களால் ஒரு முறை கூட கோப்பையை வெல்ல முடியவில்லை.

இந்நிலையில் இம்முறை ஆர்சிபி அணியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய வீரர்கள் அணியில் வாங்கப்பட்டு பலம் உடையதாக மாற்றியிருக்கின்றனர். எனவே கோலி தலைமையிலான ஆர்சிபி அணி இம்முறை வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று பலரும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இந்த தொடருக்காக ஆர்சிபி அணியில் இணைய ஏபிடி வில்லியர்ஸ் இந்தியா வந்தடைந்துள்ளார். அவரது வருகையை தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்ட ஏ.பி.டி “கோலி சிறப்பான பார்மில் இருப்பது மகிழ்ச்சி”, “நானும் அணியில் இணைய முழுவதும் தயாராகிவிட்டேன்” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரை முடித்துள்ள கோலி ஏபி டிவிலியர்ஸ் இன் இந்த பதிவிற்கு விமர்சையான பதிலளித்துள்ளார்.

அதில் “நீங்கள் இன்னும் விக்கெட்டின் இடையே வேகமாக ஓடுவீர்கள் என நம்புகிறேன்” என்று கோலி பதிவிட்டிருந்தார். இதனை கண்ட அவரின் அந்த பதிலுக்கு மீண்டும் பதிலளிக்கும் விதத்தில் ஏ.பி.டி “Let’s race tomorrow to find out” என்று பதிலளித்திருந்தார். அதாவது “நாளை நாம் ரேஸ் வைத்து யார் ஜெயிக்கிறார்கள் ?” என்பதை தெரிந்து கொள்வோம் என்று அவர் கூறியிருக்கிறார். ஓட்டத்தில் ஏ.பி.டி சிறுத்தையை போன்றவர் என்பது நாம் அறிந்ததே அதனால் ஏ.பி.டி கிட்டயே இந்த கேள்வியை கேட்பீங்களா ? என்று கோலியை ரசிகர்கள் ஜாலியாக வம்பிழுத்துள்ளனர்.

Advertisement